தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம்: ஜெயராஜின் மனைவி, மகள்களிடம் மாஜிஸ்திரேட் விசாரணை!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காமராஜ் சிலைக்கு வடபுறத்தில் செல்போன் கடை நடத்தி வந்தவர் பென்னிக்ஸ். இவர் கடந்த 20 ஆம் தேதி முழு பொதுமுடக்கம் நடைமுறைகளை மீறி நீண்ட நேரம் கடையை திறந்து வைத்திருந்ததாக தெரிகிறது. இதனால் சாத்தான்குளம் போலீசார் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜை விசாரணைக்காகக் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவர்களை பலமாக தாக்கியுள்ளனர். அதன் பின்னர் அவர்கள் கோவில்பட்டி கிளைச் சிறையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அவர்கள் உடல்நலக்குறைவால் உயிரிழந்தனர். இச்சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

இச்சம்பவம் தொடர்பாக வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து, உயிரிழந்த தந்தை, மகனின் உடல்கள் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை முடிந்துள்ள நிலையில், உறவினர்கள் உடல்களை வாங்க மறுப்பு தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல், அவர்களைத் தாக்கிய காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வரை உடல்களை பெற மாட்டோம் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று மாஜிஸ்திரேட் பாரதிதாசன், பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்குச் சென்று உயிரிழந்தவர்களின் மனைவி மற்றும் மகள்களிடம் விசாரணை நடத்தி வருகிறார். ஜெயராஜின் மனைவி, மகள்கள் தங்களது தரப்பு கோரிக்கையையும் சாட்சிகளையும் மாஜிஸ்திரேட்டிடம் தெரிவித்து வருகின்றனர்.

Most Popular

திருவள்ளூரில் 18 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் கொரோனா பரவல் குறைய தொடங்கிய நிலையில் மற்ற மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை கூடி வருகிறது. கொரோனா வைரஸ்...

9 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் : தமிழக அரசு உத்தரவு!

தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தூத்துக்குடி விவகாரத்தில் காத்திருப்பு பட்டியலில் இருந்த அருண் பாலகோபாலன் சென்னை கிரைம் எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார். தந்தை மகன் கொலை விவகாரத்தில்...

எஸ்.வி.சேகருக்கு சிறைக்கு செல்ல ஆசை இருந்தால் அதை அதிமுக அரசு நிறைவேற்றும் : அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி!

மும்மொழிக்கொள்கைக்கு கூட்டணி கட்சியான பாஜகவுக்கு ஆதரவாக அதிமுக செயல்படும் என்று பலரும் நினைத்திருந்த நிலையில் முதல்வர் எட்பாடி மும்மொழிக்கொள்கைக்கு பழனிச்சாமி எதிர்ப்பு தெரிவித்தார். இதற்கு எதிர்க்கட்சியான திமுக உள்ளிட்ட பலரும் வரவேற்பு தெரிவித்திருந்தனர். இதுகுறித்து...

10ம் வகுப்பு தேர்ச்சி பட்டியலில் குழப்பம்! – விசாரணை நடத்தும் பள்ளிக் கல்வித் துறை

10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு தொடர்பான குழப்பம் நீடித்து வரும் நிலையில், இது பற்றி பள்ளிக் கல்வித் துறை ஆணையர் விசாரணை நடத்தி வருகிறார். கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகத்தில்...
Do NOT follow this link or you will be banned from the site!