Home தமிழகம் "ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸை விடிய விடிய போலீசார் லத்தியால் அடித்தனர் " நேரடி சாட்சி வாக்குமூலம் அளித்ததாக மாஜிஸ்திரேட் பாரதிதாசன் பரபரப்பு தகவல்!

“ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸை விடிய விடிய போலீசார் லத்தியால் அடித்தனர் ” நேரடி சாட்சி வாக்குமூலம் அளித்ததாக மாஜிஸ்திரேட் பாரதிதாசன் பரபரப்பு தகவல்!

பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது என்று கூறியுள்ளது.

தமிழகத்தையே உலுக்கியுள்ள சாத்தான்குளம் விசாரணை கைதிகளான தந்தை – மகன் இருவரும் போலீசாரால் அடித்து கொல்லப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விசாரணைக்காக போலீஸ் ஸ்டேஷன் அழைத்து செல்லப்பட்ட அவர்கள் ஆசனவாயில் ரத்தம் சொட்டிய படி உடலில் பல காயங்களுடன் இறந்தனர். இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்து வந்த உயர்நீதி மன்ற மதுரைகிளை தந்தை, மகன் உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக சாத்தான்குளம் காவல்துறையினர் மீது வழக்குப் பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது என தெரிவித்துள்ளது. முதல் தகவல் அறிக்கை மற்றும் சிசிடிவி கேமரா காட்சிகளின் முரண்பாடு இருக்கிறது. உடலில் மோசமான காயங்கள் இருந்தது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. எனவே பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது என்று கூறியுள்ளது.

இந்நிலையில்  உயர் நீதிமன்ற பதிவாளருக்கு மாஜிஸ்திரேட் பாரதிதாசன் அனுப்பிய அறிக்கையில், ‘ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸை விடிய விடிய லத்தியால் அடித்தனர் என நேரடி சாட்சி வாக்குமூலம் அளித்ததாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். சாத்தான்குளம் காவல் துறையினர் தடயங்களை அழிக்க முயன்றனர்; விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அதில், ” உன்னால் ஒன்றும் முடியாது என காவலர் மகாராஜன் மிரட்டினார். சிசிடிவி காட்சி பதிவுகள் அழிக்கப்பட்டிருந்தன. பெண் தலைமை காவலர் ரேவதி வாக்குமூலம் அளிக்கும் போது மிகவும் அச்சத்துடன் இருந்தார். சாட்சியம் அளித்த பெண் காவலரை மிரட்டும் வகையில் காவலர்கள் நடந்து கொண்டனர். லத்தி  மற்றும் மேசையில் ரத்தக் கறை இருந்தது சாட்சியம் மூலம் தெரியவந்துள்ளது.அங்குள்ள ஒரு காவலரிடம் லத்தியை கேட்டபோது அவர் எகிறி குதித்து அங்கிருந்து தப்பிவிட்டார். காவலர் மகாராஜன் என்னிடம் இல்லை, அது என் அறையில் இருக்கிறது, ஊரில் வைத்து விட்டேன் என்று மாறி மாறி கூறிய பிறகு,  தான் நிர்பந்தத்தின் படியே அவர் லத்தியை கொடுத்தார்” என்று பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.

Most Popular

நீயா…, நானா? – திண்டுக்கல் Vs திருச்சி

உட்கட்சிப் பூசல்களால் உருக்குலைந்துவரும் திமுகவில் முதன்மைச் செயலாளர் கே.என் நேருவுக்கும், துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமிக்கும் இடையேயான ஈகோ யுத்தம்தான் இப்போது அந்தக் கட்சியின் ’ஹாட்- டாப்பிக்’காக வலம் வருகிறது.ஐ.பெரியசாமியோடு...

வீட்டுவாடகை கேட்ட உரிமையாளரின் மருமகள் குத்திக்கொலை…இருவர் படுகாயம்!

வீட்டு வாடகை கேட்ட உரிமையாளரின் மருமகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சூளைமேடு ராதாகிருஷ்ணன் 2வது தெருவில் வசித்து வருபவர் சந்திரமோகன். இவருடன்...

“தந்தைக்கு பெண்ணாசை ,பிள்ளைகளுக்கு பொன்னாசை” -கத்தியால் குத்திக்கொண்ட சித்தி மகன்கள்.

மஹாராஷ்டிர மாநிலம் தானேவில் ராகேஷ் என்பவரை கொன்றுவிட்டு 3.7கிலோ தங்கத்தோடு தலைமறைவான சச்சின் என்பவரையும் அவரின் ட்ரைவர் சிங் என்பவரையும் போலீசார் கைது செய்தனர் .

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மீது வழக்குப்பதிவு!

வேலூரில் வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வேளாண் மசோதாக்களுக்கு...
Do NOT follow this link or you will be banned from the site!