“உத்திரமேரூர் கோயிலில் கிடைத்த தங்க புதையல் தமிழக அரசுக்கே சொந்தம்” அமைச்சர் அதிரடி

“உத்திரமேரூர் கோயிலில் கிடைத்த தங்க புதையல் தமிழக அரசுக்கே சொந்தம்” அமைச்சர் அதிரடி

உத்திரமேரூர் கோயிலில் கிடைத்த தங்க புதையல் தமிழக அரசுக்கே சொந்தம் என தொல்லியல்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய தொல்லியல்துறை மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன், “உத்திரமேரூரில் குழம்பர ஈஸ்வரர் கோவிலில் கண்டெடுத்த நகைகள் 100 ஆண்டுகள் தொன்மை வாய்ந்தது. அதனை அரசிடம் ஒப்படைக்க வேண்டும். இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயிலாக இருந்தாலும் சரி, கிராமத்திற்கு சொந்தமான கோவில் என்றாலும் சரி, புதையல் சட்டத்தின்கீழ் நகைகளை அரசாங்கத்தில் ஒப்படைக்க வேண்டும்.

“உத்திரமேரூர் கோயிலில் கிடைத்த தங்க புதையல் தமிழக அரசுக்கே சொந்தம்” அமைச்சர் அதிரடி

மேலும் நகையை காட்சிப்படுத்த வேண்டியதா அல்லது வழிபாடு பொருட்களுடன் கோவிலில் வைக்க வேண்டியதா என்பது குறித்து அரசு தான் முடிவு செய்ய வேண்டும். நாளை சம்பவ இடத்திற்கு தொல்லியல் துறை அதிகாரிகள் செல்ல உள்ளனர். அதன் பின்பு தான் முடிவு செய்யப்படும்” என தெரிவித்தார்.