ஊர் பெயர்கள் மாற்றம் அரசாணை வாபஸ்! கொரோனா காலங்களில் விளையாண்டு கொண்டிருக்கும் அரசு

 

ஊர் பெயர்கள் மாற்றம் அரசாணை வாபஸ்! கொரோனா காலங்களில் விளையாண்டு கொண்டிருக்கும் அரசு

2018- 2019 ஆம் ஆண்டிற்கான தமிழ் வளர்ச்சி துறைக்கான னியக்கோரிக்கையின் படி தமிழகம் முழுவதும் ஊர் பெயர்களை தமிழில் உச்சரிப்பது போல ஆங்கிலத்திலும் உச்சரிக்கக் கூடிய வகையில் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டு அதனை அரசிதழில் வெளியிட்டுள்ளது. உதாரணமாக எழும்புரை ஆங்கிலத்தில் எக்மோர் எனக் குறிப்பிட்டு வந்த நிலையில் இனி எழும்பூர் என்றே மாற்றம் செய்யப்படுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள ஊர் பெயர்களை தமிழில் இருப்பது போலவே உச்சரிக்கும் படியும் அதே மாதிரி எழுதவும் கடந்த 10 ஆம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

ஊர் பெயர்கள் மாற்றம் அரசாணை வாபஸ்! கொரோனா காலங்களில் விளையாண்டு கொண்டிருக்கும் அரசு

இந்த பெயர் மாற்றம் தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தாலும், சிலர் இதற்கு அதிருப்தி தெரிவித்திருந்தனர். இன்னும் சில ஊர்பெயர்கள் முறையாக மாற்றம் செய்யப்பட வேண்டும் என்பதால் ஆதார் அட்டை பெயர் மாற்றம் உள்ளிட்ட அலுவலக ரீதியான பிரச்னை எழுந்தது.

 

இந்நிலையில் தமிழில் ஊர் பெயர்களின் ஆங்கில உச்சரிப்பு மாற்றம் குறித்த அரசாணையை தமிழக அரசு திரும்பப் பெறப்பட்டது. அனைத்து தரப்பினரின் கருத்து கேட்டு, புதிய அரசாணை வெளியிடப்ப்படும் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.