குருப் 1 தேர்வு ரத்து???

 

குருப் 1 தேர்வு ரத்து???

குருப் 1 முதல்நிலை தேர்வு முடிவை ரத்து செய்ய கோரிய வழக்கில் டிஎன்பிஎஸ்சி பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூலை 12ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குருப் 1 தேர்வு ரத்து???

பட்டப்படிப்பு மட்டும் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கி கடந்த 2021 பிப்ரவரி மாதம் டிஎன்பிஎஸ்சி சார்பில் வெளியிடப்பட்ட குரூப் 1 முதல் நிலை தேர்வு முடிவு வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்ய கோரி மதுரை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தஞ்சாவூர் பிரோஜா பேகம், மகேந்திரன், கோவிந்தசாமி, அருண், பாலு உள்ளிட்ட 6 பேர் மனு தாக்கல் செய்தனர்.

அந்த மனுவில், “டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு கடந்த 20.01.2020 வெளியிடப்பட்டது. விண்ணப் பித்தவர்களுக்கு குரூப் 1 முதல்நிலை தேர்வு 03.01.21 நடந்தது முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான தேர்வு முடிவு கடந்த 09.02.21 வெளியிடப்பட்டது.

ஆனால், இந்த முதல் நிலை தேர்வு முடிவில், தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான 20% ஒதுக்கீட்டின் படி தேர்வு செய்து அறிவிப்பு வெளியிட்டனர்.
ஆனால், உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவின் படி 1 வகுப்பு முதல் கல்லூரி பட்டப்படிப்பு வரை தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்காமல் பட்டப்படிப்பு மட்டும் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கி தேர்வு செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது ஏற்கத்தக்கதல்ல.

எனவே, 09.02.21 அன்று குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவு அறிவிப்பை ரத்து செய்து விட்டு, உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவின் படி 1 முதல் பட்டப்படிப்பு வரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கான 20% ஒதுக்கீட்டில் தேர்வு செய்து புதிய தேர்வு பட்டியல் வெளியிட உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுருந்தது.

இதனை விசாரித்த நீதிபதி வேலுமணி, மனுதாரரின் கோரிக்கை குறித்து, டிஎன்பிஎஸ்சி தரப்பில் உரிய விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 12 ஆம் தேதி ஒத்திவைத்தார்