Home க்ரைம் `என் தங்கச்சியுடன் மீண்டும் வாழணும்; 2வது கல்யாணம் பண்ணினால் கொன்னுடுவோம்!- சகோதரர்கள் மிரட்டியதால் உயிரை மாய்த்த மாமா

`என் தங்கச்சியுடன் மீண்டும் வாழணும்; 2வது கல்யாணம் பண்ணினால் கொன்னுடுவோம்!- சகோதரர்கள் மிரட்டியதால் உயிரை மாய்த்த மாமா

மதுரவாயலில் விவாகரத்து ஆன முதல் மனைவியுடன் மீண்டும் வாழ வேண்டும் என்று உறவினர்கள் அடித்து உதைத்ததால் மன உளைச்சலில் வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்துக் கொண்டார்.

மதுரவாயல், பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பிரித்திவிராஜ் (34), கடந்த 9ம் தேதி இவரது வீட்டின் வாசலில் உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதைக் கண்ட பொதுமக்கள் அவரது உடலில் இருந்த தீயை அணைத்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர். இது குறித்து மதுரவாயல் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பிரித்விராஜ் அம்பத்தூர், பாடியில் தங்கி லேத் பட்டறையில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு சத்யா என்ற பெண்ணுடன் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது.

கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் விவாகரத்து பெற்றுக் கொண்டதாகவும் தற்போது வேறொரு பெண்ணுடன் பிரித்விராஜ் திருமணம் செய்யவிருந்த நிலையில் முதல் மனைவி சத்யாவின் சகோதரர்களான தாமு, இளையராஜா ஆகிய 2 பேரும் பிரித்திவிராஜ் அடித்து உதைத்து மகாபலிபுரத்தில் உள்ள வீட்டில் தங்க வைத்து தனது தங்கையுடன் மீண்டும் திருமணம் செய்து கொண்டு வாழ வேண்டும் என அடித்து உதைத்துள்ளனர். இதனால் மிகுந்த மன வேதனையில் இருந்த பிரித்விராஜ் அங்கிருந்து யாருக்கும் தெரியாமல் தப்பி வீட்டிற்கு வந்து உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டு இருப்பது தெரியவந்தது.

இதில் சிகிச்சை பலனின்றி பிரித்விராஜ் இறந்து போனார். தற்போது இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள இரண்டு பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். விவாகரத்தான தங்கையுடன் மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என அண்ணன்கள், மாமாவை அடித்து உதைத்த சம்பவத்தில் தீ வைத்து எரித்துக் கொண்டு இறந்து போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாவட்ட செய்திகள்

Most Popular

சென்னையில் அனுமதியின்றி கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை நீட்டிப்பு- கமிஷ்னர்

கொரோனா பாதிப்பு பன்மடங்கு அதிகரித்துக் கொண்டே வந்ததால், நோயக்கட்டுப்பாட்டு நடவடிக்கையாக மார்ச் 24ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அதிகமாக கூடும் அனைத்து...

விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட வாலிபர் காவல்நிலையத்திலேயே மரணம்

மதுரை அருகே விசாரணைக்கு அழைத்து சென்ற வாலிபர் காவல்நிலையத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியைச் சேர்ந்த முத்தையா என்பவரது...

7 பேர் விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்த 6 பேர் கைது

சென்னை பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக் கோரி, அம்பத்தூரில் உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைதுசெய்தனர். ராஜிவ்காந்தி கொலை...

டெல்லி விவசாயிகள் புரட்சி இந்தியா முழுவதும் வெடிக்கும்: சீமான்

விவசாயிகள் போராட்டத்தையடுத்து வேளாண் சட்டங்களை உடனடியாகத் திரும்பப் பெற முன்வர வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து நாம்...
Do NOT follow this link or you will be banned from the site!