செங்கல்பட்டின் மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி நிரம்பியது!

 

செங்கல்பட்டின் மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி  நிரம்பியது!

செங்கல்பட்டின் மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி முழுகொள்ளளவை அடைந்தது.

செங்கல்பட்டின் மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி  நிரம்பியது!

இந்நிலையில் செங்கல்பட்டின் மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி முழுகொள்ளளவான 23.3 அடியை எட்டியது.மதுராந்தகம் ஏரிக்கு விநாடிக்கு 500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் நீர்திறப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டின் மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி  நிரம்பியது!

செங்கல்பட்டு மாவட்டத்தில் நிவர் புயல் காரணமாக பெய்த அதிக மழைப்பொழிவு காரணமாக மாவட்டத்தின் பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.இந்த ஏரியின் வெள்ள மழை நீர் உபரி நீராக ஏரியின் கலிங்கல் மூலம் கிளி ஆற்றில் வெளியேற்றி வருவதால் கிளி ஆற்றை ஒட்டிய கரையோர கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் யாரும் ஆற்றில் செல்ல வேண்டாம் எனவும் என்று பொதுப்பணித்துறை நேற்று எச்சரிக்கை விடுத்தது. அத்துடன் பொது மக்கள் யாரும் ஆற்றினை கடக்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ வேண்டாம் எனவும் கால்நடைகளை ஆற்றிற்கு செல்லாமல் பார்த்துக் கொள்ளவும், வீட்டில் உள்ள சிறுவர் சிறுமிகளை ஆற்றில் அருகில் செல்லாமல் இருக்க பெற்றோர் விழிப்புடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.