மதுரை கெட்டப்பில் ஆஸ்திரேலிய வீரர் வார்னர் – வைரலாகும் போட்டோ!

 

மதுரை கெட்டப்பில் ஆஸ்திரேலிய வீரர் வார்னர் – வைரலாகும் போட்டோ!

ஆஸ்திரேலியாவின் மிக முக்கியமான வீரர் டேவிட் வார்னர். இப்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா – இந்தியா போட்டித் தொடரில் முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றியடைய வார்னரின் பங்களிப்பு மிகப் பெரியது. ஆனால், இரண்டாம் போட்டியில் காயம் அடைந்ததால் அடுத்தடுத்த போட்டிகளில் ஆட முடியாமல் ஓய்வெடுக்கிறார்.

சோஷியல் மீடியாவில் எப்போதும் தன்னை பரபரப்பாக வைத்துக்கொள்ள டேவிட் வார்னர் ஆசைப்படுபவர். டிக்டாக் ஓர் இளைஞர் தன்னை ஓவியமாக வரைபவதையும் அதற்கு தன் முகபாவனையையும் இணைத்து வீடியோ வெளியிட்டு வைரலாக்கியவர்.

மதுரை கெட்டப்பில் ஆஸ்திரேலிய வீரர் வார்னர் – வைரலாகும் போட்டோ!

அடுத்து கணேஷ் எனும் இளைஞர் டேவிர் வார்னர் ஒரு கையில் கிரிக்கெட் பேட்டையும் மறு கையில் சேவலையும் பிடித்திருப்பதாக உருவாக்கிய போட்டோ ஷாப் படத்தையும் மகிழ்ச்சியோடு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

இதன் தொடர்ச்சியாக தற்போது அவர் இன்ஸ்ட்ராகிராமில் வெளியிட்டிருக்கும் ஓர் ஓவியம் வைரலாகி வருகிறது. தேனியைச் சேர்ந்த ஒரு இளைஞர் ’வர்றேண்டா மாப்ள’ என மதுரை வட்டார மொழியில் பேசி வீடியோ வெளியிடுவது அவ்வப்போது நடக்கும். அது சோஷியல் மீடியாவில் வைரலாகும். அந்த இளைஞரின் உருவத்தைப் போல டேவிட் வார்னர் உருவம் வரைப்பட்ட ஓவியத்தை தனது இன்ஸ்டா கிராமில் வெளியிட்டு அசத்தியிருக்கிறார் வார்னர்.

மதுரை கெட்டப்பில் ஆஸ்திரேலிய வீரர் வார்னர் – வைரலாகும் போட்டோ!

இது இப்போது பலராலும் ஷேர் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது.