மதுரை மாணவி தற்கொலை… ஓ.பி.எஸ் இரங்கல்; மாணவர்கள் மனம் தளர வேண்டாம் என அறிவுரை

 

மதுரை மாணவி தற்கொலை… ஓ.பி.எஸ் இரங்கல்; மாணவர்கள் மனம் தளர வேண்டாம் என அறிவுரை

மதுரையில் நீட் தேர்வு அச்சம் காரணமாக மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதாக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் நாளை நீட் நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது. பெற்றோர், பொது மக்கள், தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பையும் மீறி மத்திய பாரதிய

மதுரை மாணவி தற்கொலை… ஓ.பி.எஸ் இரங்கல்; மாணவர்கள் மனம் தளர வேண்டாம் என அறிவுரை

ஜனதா கட்சி அரசு தீவிரமாக நீட் தேர்வை நடைமுறைப்படுத்தி வருகிறது. இதனால், தகுதி இருந்தும் மருத்துவம் படிக்க முடியாமல் ஏராளமான மாணவர்களின் கனவுகள் சிதைகின்றன
மதுரையில் சப் இன்ஸ்பெக்டரின் மகள் ஜோதி ஶ்ரீதுர்கா நீட் தேர்வுக்கு ஒரு நாளைக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில தினங்களுக்கு முன்புதான் அரியலூரைச் சேர்ந்த மாணவர் தற்கொலை செய்து கொண்டார். அந்த சோகம் மறைவதற்கு முன்னதாக மாணவி தற்கொலை நிகழ்ந்துள்ளது.


மாணவியின் மரணத்துக்கு தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார். அவருடைய ட்விட்டர் பதிவில், “மதுரையைச் சேர்ந்த மாணவி செல்வி.ஜோதி ஸ்ரீ துர்கா அவர்கள் இன்று காலை தற்கொலை செய்து உயிரிழந்தார் என்ற துயரச்செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். மாணவியின் பிரிவால் மிகுந்த துயருற்றிருக்கும் அவரது

மதுரை மாணவி தற்கொலை… ஓ.பி.எஸ் இரங்கல்; மாணவர்கள் மனம் தளர வேண்டாம் என அறிவுரை

குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
எதிர்காலத் தூண்களாகிய மாணவச்செல்வங்களின் இதுபோன்ற விபரீதமுடிவுகள் மிகுந்த துயரத்தை அளிக்கிறது. மாணவச்செல்வங்கள் மனந்தளராமல் எதையும் துணிந்து எதிர்கொள்ளும் தன்மையை வளர்த்துக்கொள்ள வேண்டுமெனவும் பெற்றோர்களும் மாணவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டுமெனவும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

மதுரை மாணவி தற்கொலை… ஓ.பி.எஸ் இரங்கல்; மாணவர்கள் மனம் தளர வேண்டாம் என அறிவுரை


மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ள வழிவகை செய்ய வேண்டும், அல்லது நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். இந்த இரண்டில் ஒன்றைக் கட்டாயம் செய்யாவிட்டால் உயிரிழப்புகள் தொடர்வதை தவிர்க்க முடியாது என்று சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.