மோடியிடம் பாராட்டு பெற்ற மதுரை சலூன் கடைக்காரர்.. குடும்பத்துடன் பா.ஜ.கவில் இணைந்தார்!

கொரோனா வைரஸ் இந்தியாவை முற்றிலுமாக புரட்டி போட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா 7 ஆவது இடத்தில் இருப்பதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகின. இதனை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வந்தாலும், கொரோனா பாதிப்பு குறைந்ததாக இல்லை. இதனால் புதிய தளர்வுகளுடன் 5 ஆம் கட்ட ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளிய மக்களுக்கு பலர் உதவி வருகின்றனர். அதே போல மதுரை மேலடை பகுதியில் வசித்து வரும் மோகன் என்னும் முடிதிருத்தும் தொழில் செய்து வருபவர் தனது மகளின் கல்வி செலவுக்கு சேமித்து வைத்திருந்த ரூ.5 லட்சம் பணத்தை ஏழைகளுக்கு உதவியுள்ளார். நேற்று மான் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, மோகனுக்கு தனது பாராட்டுகளை தெரிவிப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், பிரதமரிடம் பாராட்டு பெற்ற மோகன் அவரது குடும்பத்தினருடன் மதுரை மாநகர தலைவர் சீனிவாசன் முன்னிலையில் பா.ஜ.கவில் இணைந்துள்ளார். அவர்கள் அனைவரையும் பொன்னாடை போற்றி பா.ஜ.கவினர் அவர்களது கட்சியில் இணைத்துக் கொண்டனர்.

- Advertisment -

Most Popular

எஸ்.ஐ. வில்சன் கொலை: என்.ஐ.ஏ. குற்றப்பத்திரிக்கை தாக்கல்

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை எஸ்.ஐ வில்சன் கடந்த ஜனவரி மாதம் பணியிலிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் அப்துல் சமீம் மற்றும் தஃவ்பீக் என்ற இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் குற்றவாளிகள்...

கோயம்பேடு காய்கனி சந்தை விவகாரத்தில் பொறுப்புகளை தட்டிக் கழிக்காதீர்கள்- மக்கள் நீதி மய்யம்

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இன்று புதிதாக 3,680 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,30,261 ஆக அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலானோர்...

பெண்களைப் பாடாய்ப்படுத்தும் பொடுகுத்தொல்லைக்கு தீர்வு!

பொடுகு... தலையில் அழுக்குகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பொடுகு சேர்ந்தால் பெரிய தொல்லைகளுக்கு வழிவகுக்கும். தலையில் அரிப்பு,கொப்புளம் என பிரச்சினைகள் தொடரும். அதுமட்டுமல்ல இந்த பாதிப்பு நீடித்தால் தலைமுடி அதிகமாக உதிரத் தொடங்கும்....

திருச்சி சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில் உறவினர் செந்தில் கைது!

திருச்சி 9ஆம் வகுப்பு மாணவி கொலை தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய மேலும் கூடுதலாக 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சோமரசம்பேட்டை அருகே உள்ள அரியாவூர் அதவத்தூர் பாளையத்தைச் சேர்ந்த பெரியசாமி என்பவரின் மகள் நேற்று மதியம்...
Open

ttn

Close