மதுரை மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு நீண்ட தூரம் செல்லக் கூடாது – காவல் ஆணையர் எச்சரிக்கை!

 

மதுரை மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு நீண்ட தூரம் செல்லக் கூடாது – காவல் ஆணையர் எச்சரிக்கை!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவி வருவதால் ஜூலை 31 ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டது. பொது முடக்கம் அமலில் இருப்பினும் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்கு பாஸ் தேவையில்லை என்றும் பிற மாவட்டங்களுக்குச் செல்ல பாஸ் பெற வேண்டும் என்ற தளர்வுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் மதுரை,தேனி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஜூலை 5 வரை முழு பொதுமுடக்கம் அமலில் இருந்த நிலையில் மதுரையில் மட்டும் ஜூலை 12 ஆம் தேதி வரை முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது.

மதுரை மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு நீண்ட தூரம் செல்லக் கூடாது – காவல் ஆணையர் எச்சரிக்கை!

இருப்பினும் மதுரையில் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால் மதுரை மாநகர் முழுவதும் முழு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அம்மாவட்டத்தில் பல வாகன சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, தீவிர வாகன சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இது குறித்து பேசிய மதுரை மாநகர காவல் ஆணையர், அத்தியாவசிய பொருட்களை வாங்க நீண்டதூரம் வாகனங்களில் சென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அருகாமையில் உள்ள கடைகளில் மளிகை, காய்கறிகளை மக்கள் வாங்கிக் கொள்ள வேண்டும் என்றும் மக்களின் நலன் கருதி இந்த விதிமுறைகள் தீவிரமாக அமல்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.