இளைஞர் தலை துண்டித்து கொல்லப்பட்ட வழக்கில் ஒருவர் சரண்

 

இளைஞர் தலை துண்டித்து கொல்லப்பட்ட வழக்கில் ஒருவர் சரண்

திண்டுக்கல்

மதுரையில் இளைஞர் தலை துண்டித்து கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி, திண்டுக்கல் நீதிமன்றத்தில் சரணடைந்தார். கடந்த 15ஆம் தேதி மதுரை கீழவெளி வீதி செயிண்ட் மேரிஸ் சர்ச் அருகே உத்தங்குடியை சேர்ந்த முருகானந்தம் என்பவர், மர்ம நபர்களால் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து கீரைத்துறை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இளைஞர் தலை துண்டித்து கொல்லப்பட்ட வழக்கில் ஒருவர் சரண்

இதில், முருகானந்தம், தனது நண்பர்களான முனுசாமி மற்றும் மணிகண்டன் ஆகியோரை கொலை செய்யும் நோக்கத்துடன் அழைத்துச் சென்றதும், அப்போது இருவரும் தப்பியோடிய நிலையில், முனுசாமியின் ஆதரவாளர்கள் முருகானந்தத்தை கொலை செய்ததும் தெரியவந்தது. இதனையடுத்து, முனுசாமியின் ஆதரவாளர்களான சின்ன அலெக்ஸ் என்ற அலெக்ஸ்பாண்டியன், அழகுராஜா, பழனிமுருகன், தவசி உள்ளிட்டோரை, தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், வழக்கில் அலெக்ஸ் பாண்டியன் இன்று திண்டுக்கல் நீதித்துறை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார். இதனையடுத்து அவரை நீதிமன்ற காவலில் வைக்க மேஜிஸ்ட்ரேட் திலீப்பாபு உத்தரவிட்டார். தொடர்ந்து, அலெக்ஸ் பாண்டியன் வேடசந்தூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.