ஒரு கோடி தருகிறேன்…எனது தொகுதி இளைஞர்களுக்கு தடுப்பூசி போடுங்கள் – எம்.பி சு.வெங்கடேசன்

 

ஒரு கோடி தருகிறேன்…எனது தொகுதி இளைஞர்களுக்கு தடுப்பூசி போடுங்கள் – எம்.பி சு.வெங்கடேசன்

மதுரை தொகுதியில் உள்ள இளைஞர்கள் 30000 பேருக்கு தடுப்பூசி செலுத்த தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒரு கோடி தருவதாக உறுதியளித்து மத்திய சுகாதார செயலாளருக்கு கடிதம் எழுதியிருப்பதாக எம்.பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று மத்திய சுகாதார செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளேன். இதோ கடிதத்தின் உள்ளடக்கம். முதலில் நாடு முழுமையும் உச்சபட்ச அர்ப்பணிப்போடும் கடும் உழைப்போடும் கோவிட்டை எதிர்த்து களத்தில் போராடி வரும் சுகாதார பணியாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். அவர்களின் முயற்சிகள் அமைதியையும் நிம்மதியையும் மக்களின் வாழ்வில் விரைவில் கொண்டு வரும் என்று நம்புகிறேன். கோவிட பேரிடர் இரண்டாம் அலை 18 முதல் 45 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களை அதிகமாக பாதிக்கும் என எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதை மனதில் கொண்டு ஒன்றிய அரசாங்கம் இந்த வயது அடைப்பிற்கு வரக்கூடிய அனைவருக்கும் விரைவில் தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்யும் என நம்புகிறேன்.

ஒரு கோடி தருகிறேன்…எனது தொகுதி இளைஞர்களுக்கு தடுப்பூசி போடுங்கள் – எம்.பி சு.வெங்கடேசன்

மேலும், களத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் அதிகாரிகள் தவிர குடிமை, சமூகம் இதர நிவாரண பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும். அரசின் முயற்சிகளுக்கு துணைபுரிய செய்ய வேண்டும் என கருதுகிறேன். அதுவும் சுகாதார பணியாளர்கள் அரசின் முன் களப்பணியாளர்கள் பெரும் மன அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளார்கள் என்று செய்திகள் வந்துள்ளன. இந்த சூழ்நிலையில் இது முக்கியமானது. ஓராண்டு நீண்ட பேரிடர் படையில் இத்தகைய மன உளைச்சல் இயல்பானதுதான்.

ஒன்றிய மாநில அரசின் பணிகளில் உதவ, வழிகாட்டல்கள் குறித்த செய்திகளை மக்களிடம் சேர்க்க, விழிப்புணர்வை உருவாக்க எனது மதுரை நாடாளுமன்ற தொகுதியில் தன்னார்வ இளைஞர்களை ஈடுபடுத்தி திட்டமிட்டுள்ளேன். அவர்கள் இரண்டாம் நிலை சுகாதார ஆர்வலர் படையாக செயல்படுவார்கள். அலுவலருக்கு உதவுவார்கள், கோவிட் நோயாளிகளுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் முதல் உதவுவார்கள். மருத்துவமனை படுக்கைகள் கிடைப்பது உணவு பாதிக்கப்பட்டவர்களுக்கு வழிகாட்டல் நிலைமையை கண்காணித்து வீட்டில் தனிமை படுத்தப்பட்ட மக்களுடன் தொடர்புகளை பலப்படுத்துவது எல்லாருக்கும் தடுப்பூசி ஆகியவற்றை உறுதி செய்வார்கள்.

இதன் வாயிலாக முன்கள பணியாளர்களுக்கு வேலை பளுவை குறைக்க முடியும். அதன் மூலம் கோபத்தோடு அவர்களுக்கான சிகிச்சையில் கண்காணிக்க மட்டும் அவர்களின் கவனம் குறிப்பை உறுதி செய்ய முடியும். இதன் மீது உங்களது ஒத்துழைப்பை நாடுகிறோம். தடுப்பூசிகளை எனது தொகுதியில் உள்ள இளைஞர்களுக்கு எனது எம்பி தொகுதி மேம்பாட்டு நிதி வாயிலாக முன்னுரிமை அளித்து வழங்கிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். அதன் மூலம் அவர்களை கோவில் எதிர்ப்பு களப்பணியில் அவர்களை தன்னார்வலர்களை அதை எனது தொகுதியில் பயன்படுத்த முடியும். இதற்காக துவக்கமாக எனது எம்பி மேம்பாட்டு நிதியிலிருந்து 30,000 தன்னார்வ இளைஞர்களுக்கு முழுமையாக தடுப்பூசி வழங்க விரும்புகிறேன். அதன் பின் ஒழிப்பு பணியில் அவர்கள் ஈடுபடுவார்கள்.

நான் அடிப்படையான கொள்கை நிலையை வலியுறுத்தி பதிவு செய்கிறேன். எல்லோருக்கும் இலவச தடுப்பூசி என்பதற்கான கொள்கை உருவாக்கப்பட்டு அமலாக்கப்பட்ட ஒட்டுமொத்த மக்கள் பயன்பெற வேண்டும். அரசின் தற்போதைய கொள்கை வரம்பிற்கு உட்பட்டு ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன். எனது தொகுதிக்கு போதுமான தடுப்பூசிகளை வழங்குங்கள் மேலே கூறிய மனிதநேய சேவைக்கு அது பயன்படும். தன்னார்வ இளைஞர் 30,000 பேருக்கு இரண்டு முறைக்கும் சேர்த்து எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து வழங்குவேன். உங்களின் ஒப்புதல் கிடைத்தவுடன் இத்தொகை அனுப்பப்படுவதை உறுதி செய்வேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.