விவேக் அனுப்பிய கடைசி வாட்ஸ்அப் மெசெஜ் இது தான்!

 

விவேக் அனுப்பிய கடைசி வாட்ஸ்அப் மெசெஜ் இது தான்!

தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற நகைச்சவை நடிகர், கவிஞர், எழுத்தாளர், குணச்சித்திர நடிகர் என பன்முக திறமைகளைக் கொண்டவர் விவேக்(59). திரையில் மட்டுமல்லாமல் நிஜத்திலும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தவர். அப்துல் கலாமின் தீவிர ஆதரவாளராக விவேக் தன் வாழ்நாளில் 1 கோடி மரக்கன்றுகள் நடுவேன் என்ற லட்சியத்தில் பயணித்துக் கொண்டிருந்தார்.

விவேக் அனுப்பிய கடைசி வாட்ஸ்அப் மெசெஜ் இது தான்!

ஆனால் 33.23 லட்சம் மரக்கன்றுகள் நட்டியிருந்தபோதே காலம் எனும் கொடிய நோய் அவரை அழைத்துச் சென்றுவிட்டது. அவரின் மறைவுக்குத் திரைப் பிரபலங்கள் மட்டுமல்லாமல் பல்வேறு தரப்பினரும் உருக்கமான இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். சிலர் விவேக்குடன் இருந்த நினைவலைகளைப் பகிர்கிறார்கள். அந்த வகையில் மதுரை எம்பி சு.வெங்கடேசன் விவேக் அனுப்பிய கடைசி மெசெஜை குறிப்பிட்டு உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.

விவேக் அனுப்பிய கடைசி வாட்ஸ்அப் மெசெஜ் இது தான்!

மதுரையின் மீது வாஞ்சைகொண்ட மக்கள் கலைஞன் என்ற தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள இரங்கலில், “பேசும் பொழுதெல்லாம் “மதுரையில் மரம் நடும் இயக்கத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள் சார், நீங்கள் எப்பொழுது அழைத்தாலும் நான் வருகிறேன்” என்று தொடர்ந்து சொல்லிவந்தவர் திரைக்கலைஞர் விவேக். ஸ்மார்ட் சிட்டி வேலைகளால் மதுரையின் மையப்பகுதிகளில் இருந்த வெகுசில மரங்களையும் இழந்துவிட்டோம். நான்கு மாசிவீதிகளுக்குள் எத்தனை மரங்கள் தான் இருக்கின்றன என DYFI தோழர்கள் மூலம் கணக்கெடுப்பு நடத்தினோம்.

விவேக் அனுப்பிய கடைசி வாட்ஸ்அப் மெசெஜ் இது தான்!

கூடல் மாநகரின் பெரும் கொடுமையாக இருந்தது அந்த எண்கள். விவேக் சாரிடம் பேசினேன். மதுரையின் மீது அவருக்கு இருக்கும் வாஞ்சை ஒவ்வொரு சொல்லிலும் வெளிப்பட்டது. கொரோனா காலம் முடிந்ததும் பெரும் இயக்கமாக மதுரையில் இதனை நடத்துவோம் என்று மீண்டும் மீண்டும் சொன்னார். நேற்று முன்தினம் அவர் தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு கொடுத்த ஊடகவியலாளர் சந்திப்பை பார்த்ததும் அழைத்து பேச வேண்டுமென தோன்றியது. ஆனால் ஏனோ அழைக்காமல் விட்டுவிட்டேன்.

May be an image of tree and text that says 'கீழடி மன்னர் வீரம் வாளடி, இந்த மண்ணின் தொன்மை கீழடி! என்றும் வணங்கும் ஈரடி..அது எங்கள் திருக்குறள் பாரடி! பண்டைத்தமிழன் தோளடி; அதன் வன்மை திணமை பேரிடி! தங்கத் தமிழ்த்தாய் காலடி, அதைத் தழுவிடும் பேரினம் நானடி! ~நடிகர் விவேக்'

நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி கேள்விப்பட்டதில் இருந்து உள்ளுக்குள் ஒரு பதட்டம் இருந்து கொண்டே இருந்தது. இன்று காலை அந்த கொடுஞ்செய்தி நம்மையெல்லாம் நிலைகுலைய வைத்துவிட்டது. எனது தொலைபேசி எண்ணுக்கு வாட்ஸ் அப்பில் அவர் கடைசியாக அனுப்பிய செய்தி என்னவென்று பார்த்தேன். “எப்போதோ எழுதியது. இப்போது twitter ல் trend ஆகிறது சார்“ என எழுதி இந்த (மேலே இருக்கும் போட்டோ) போஸ்டரை அனுப்பியிருக்கிறார். மக்கள் கலைஞனின் புகழ் நீடு வாழ்க!” என்று குறிப்பிட்டிருக்கிறார்.