மருத்துவக் கழிவுகளை சாலையில் கொட்டிய மதுரை மியாட் மருத்துவமனைக்கு அபராதம்!

மருத்துவக் கழிவுகளை சாலையில் கொட்டிய மதுரை மியாட் மருத்துவமனைக்கு அபராதம்!

மருத்துவக் கழிவுகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்தாமல், சாலையோரம் கொட்டி மதுரை தனியார் மருத்துவமனையான மியாட்டுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர்.

மருத்துவக் கழிவுகளை சாலையில் கொட்டிய மதுரை மியாட் மருத்துவமனைக்கு அபராதம்!
மருத்துவ மனை கழிவுகள் தொற்று நோயை ஏற்படுத்தும் தன்மை கொண்டது என்பதால் அதை மிகவும் பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதை மீறி பல மருத்துவமனைகள் ஆங்காங்கே பொது குப்பைத் தொட்டிகள், நீர் நிலைகளில் மருத்துவக் கழிவுகளை கொட்டுவதை வழக்கமாக வைத்துள்ளன.

மருத்துவக் கழிவுகளை சாலையில் கொட்டிய மதுரை மியாட் மருத்துவமனைக்கு அபராதம்!
மதுரையில் செயல்பட்டு வரும் மியாட் மருத்துவமனை இப்படி மருத்துவக் கழிவுகளை பொது இடங்களில் கொட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து மதுரை மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் அந்தப் பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது, ஏராளமான அளவில் மருத்துவக் கழிவுகள் இருந்ததை அவர்கள் கண்டுபிடித்தனர். இதில் மாஸ்க், பிபிடி கவச உடைகளும் இருந்துள்ளன.
இதைத் தொடர்ந்து நோய்ப் பரப்பும் வகையில் செயல்பட்டதாக மியாட்

மருத்துவக் கழிவுகளை சாலையில் கொட்டிய மதுரை மியாட் மருத்துவமனைக்கு அபராதம்!

மருத்துவமனை நிர்வாகம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அந்த மருத்துவமனைக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து மருத்துவக் கழிவுகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்தாமல் சாலையில் வீசினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர். இது போன்ற குற்றச் செயலில் ஈடுபடும் மற்ற மருத்துவமனைகளுக்கும் மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.