ரவுடி கும்பலை கண்காணிக்க செயலி- மதுரை மாநகர காவல் ஆணையர் தொடங்கிவைத்தார்

 

ரவுடி கும்பலை கண்காணிக்க செயலி- மதுரை மாநகர காவல் ஆணையர் தொடங்கிவைத்தார்

மதுரை
மதுரையில் செயல்பட்டு வரும் ரவுடி கும்பல்களைக் கண்காணிக்க , மதுரை மாவட்ட போலீசார் செயலியை உருவாக்கியுள்ளனர். இந்த செயலியில், மதுரை மாநகர் மாவட்டம் மற்றும் புறநகரப் பகுதிகளில் செயல்பட்டு வரும் 25 ரவுடி கும்பல்கள் குறித்த தகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக சுமார் 700 ரவுடிகள் குறித்த தகவல்களும் உள்ளன. இந்த தகவல்களை முக்கிய காவல் அதிகாரிகள் தங்களது கணினி வழியாகவும் பார்த்துக் கொள்ள வகை செய்யப்பட்டுள்ளது.

ரவுடி கும்பலை கண்காணிக்க செயலி- மதுரை மாநகர காவல் ஆணையர் தொடங்கிவைத்தார்


இந்த செயலிமூலம் காவல்துறை அதிகாரிகள், ரவுடிகள் குறித்த விவரங்களை தெரிந்து கொள்வதுடன், அவர்கள் மீதுள்ள வழக்குகள், வழக்குகள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை, வழக்குகள் நீதிமன்றத்தில் வரும் தேதி, போன்றவையும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அந்த ரவுடி கும்பல்களுக்கு வரும் வருமான போன்றவையும் இந்த செயலி வழியாக தெரிந்து கொள்ள முடியும்.
இது தொடர்பாக, மதுரை மாநகர காவல்துறை ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா கூறுகையில், இந்த செயலி மூலம் ரவுடிகள் குறித்த விவரங்கள் மற்றும், அவர்கள் மீதான வழக்குகளை உடனடியாக தெரிந்து கொள்ள முடியும் என்பதால், காவல் துறையினருக்கு நேரம் மிச்சமாகும் என்றார்.
ரவுடிகளை கண்காணிப்பதில்தான் காவல்துறைக்கு அதிக நேரம் எடுக்கிறது. அதை குறைப்பதன் மூலம் குற்ற நடவடிக்கைகளை தடுப்பதற்கு அவர்களுக்கு அதிக நேரம் கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.

இதன் அடுத்த கட்டமாக மதுரை மாநகருக்குள் நுழையும் பகுதிகள், வைகை ஆற்று பாலங்கள், மற்றும் முக்கிய சந்திப்புகளில் உள்ள உயர் திறன் தானியங்கி கேமராக்கள் பொருத்த உள்ளதாகவும், வாகனத் திருட்டு மற்றும் செயின் பறிப்பு குற்றவாளிகளை பிடிக்க இதை செயல்படுத்த உள்ளதாகவும் ஆணையர் தெரிவித்தார்.

ரவுடி கும்பலை கண்காணிக்க செயலி- மதுரை மாநகர காவல் ஆணையர் தொடங்கிவைத்தார்


வட சென்னை கூடுதல் ஆணையராக பணியாற்றியபோது, இப்படி ஒரு செயலியை உருவாக்க திட்டமிட்டதாகவும், தனது ஆலோசனையின் பேரில், தனது நண்பர் இந்த செயலியை வடிவமைத்துள்ளதாகவும் தெரிவித்தார். மதுரை ஆணையராக பொறுப்பேற்றதும், இதற்காக முழுவீச்சில் செயல்பட்டு காவல்துறைக்கு நவீன வசதியை பிரேம் ஆனந்த் சின்ஹா ஏற்படுத்தியுள்ளார்.