மதுரை ரஜினி மக்கள் மன்றத்தினர் திமுகவில் இணைந்தனர்!

 

மதுரை ரஜினி மக்கள் மன்றத்தினர் திமுகவில் இணைந்தனர்!

சட்டமன்ற தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெறவுள்ளது. இதனால் அரசியல் கட்சியினர் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.அந்த வகையில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பரப்புரையில் ஈடுபட்டு வரும் மு.க.ஸ்டாலின், இன்று 4ஆம் கட்ட பரப்புரையை மேற்கொண்டு வருகிறார்.

மதுரை ரஜினி மக்கள் மன்றத்தினர் திமுகவில் இணைந்தனர்!

இன்று முதல் 22ஆம் தேதி வரை தேர்தல் பிரச்சாரம் செய்யும் மு.க.ஸ்டாலின் மதுரை, தேனி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் மாவட்டங்களில் பரப்புரை செய்கிறார்.மதுரை வடக்கு, தெற்கு, தேனி வடக்கு, தெற்கு, கோவை மாநகர் கிழக்கு, மேற்கு, கோவை வடக்கு, நீலகிரி, கோவை கிழக்கு, தெற்கு, திருப்பூர் கிழக்கு, தெற்கு, வடக்கு, மத்தி, ஈரோடு தெற்கு, வடக்கு, சேலம் மேற்கு உள்ள இடங்களில் மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்கிறார் ஸ்டாலின்.

மதுரை ரஜினி மக்கள் மன்றத்தினர் திமுகவில் இணைந்தனர்!

இந்நிலையில் மதுரையில் ரஜினி மக்கள் மன்றத்தினர் 100ற்கும் மேற்பட்டோர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.மதுரையில் பிரச்சாரம் செய்து வரும் ஸ்டாலினை சந்தித்த ரஜினி மக்கள் மன்றத்தினர் திமுகவில் தங்களை இணைத்து கொண்டனர்.