டோர்டெலிவரி முறையில் கேரள லாட்டரி விற்பனை – முதியவர் கைது

 

டோர்டெலிவரி முறையில் கேரள லாட்டரி விற்பனை – முதியவர் கைது

மதுரை

அலங்காநல்லூர் பகுதியில் டோர் டெலிவரி முறையில் தடைசெய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த முதியவரை போலீசார் அதிரடியாக கைதுசெய்தனர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் சுற்றுவட்டார பகுதிகளில் அரசால் தடைசெய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட்டுகள், செல்போனில் தொடர்புகொண்டால் இருக்கும் இடத்திற்கே வந்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு புகார் வந்தது.

டோர்டெலிவரி முறையில் கேரள லாட்டரி விற்பனை – முதியவர் கைது


இதனையடுத்து, போலீசார் லாட்டரி சீட்டு விற்பனை செய்பவர்களை பிடிக்க, அவர்களிடம் லாட்டரி சீட்டு வாங்குவதுபோல் நடித்து, அலங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த முதியவர் ஒருவர், அரசால் தடைசெய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட்டுகளை போலீசாரிடம் விற்பனை செய்ய முயன்றார்.

டோர்டெலிவரி முறையில் கேரள லாட்டரி விற்பனை – முதியவர் கைது

இதனையடுத்து அவரை கைதுசெய்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவர் பெரியஊர்சேரி பகுதியை சேர்ந்த செல்வம் (57) என்பது தெரியவந்தது
. அவர் அளித்த தகவலின் பேரில் கட்டுக்கட்டாக லாட்டரி சீட்டுகளையும், விற்பனைக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்த போலீசார், செல்வத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உசிலம்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர்.