சாத்தான்குளம் தந்தை, மகன் சித்ரவதை மரணத்தை தாமாக முன்வந்து விசாரித்த மதுரை கிளை நீதிபதி இடமாற்றம்!

 

சாத்தான்குளம் தந்தை, மகன் சித்ரவதை மரணத்தை தாமாக முன்வந்து விசாரித்த மதுரை கிளை நீதிபதி இடமாற்றம்!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இருக்கும் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் காவல்துறையினரால் தாக்கப்பட்டு சிறையில் உயிரிழந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றக்கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. அதில் இன்று நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் உயிரிழந்தவர்களின் பிரேதப் பரிசோதனை அறிக்கையைத் தாக்கல் செய்திருக்கிறார். அந்த அறிக்கையில், இருவரின் உடலில் அதிக அளவு காயம் இருந்தது. இதனால் சாத்தான்குளம் காவலர்கள் மீது வழக்குப்பதிவு முகாந்திரம் உள்ளது என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், காவலர்கள் கொடுத்த அறிக்கைக்கும் பிரேதப் பரிசோதனை அறிக்கைக்கு மாறுபாடுகள் அதிகமாக இருப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் இந்த வழக்கு தொடர்பாக குற்றவாளிகள் மற்றும் குற்றத்தில் தொடர்புடையவர்களிடம் சிபிசிஐடி விசாரணை நடத்திவருகிறது.

சாத்தான்குளம் தந்தை, மகன் சித்ரவதை மரணத்தை தாமாக முன்வந்து விசாரித்த மதுரை கிளை நீதிபதி இடமாற்றம்!
இந்நிலையில் சாத்தான்குளம் தந்தை, மகன் சித்திரவதை மரணத்தை தாமாக முன்வந்து விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி பி.என்.பிரகாஷ், சென்னைக்கு இடமாற்றம். அவருக்கு பதிலாக நீதிபதி சத்யநாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்.ஜூலை 6ம் தேதி முதல் , உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் நிர்வாக நீதிபதியாக சத்தியநாராயணன் செயல்பட உள்ளார். 3 மாதங்களுக்கு ஒருமுறை நீதிபதிகள் சுழற்சி முறையில், மாற்றம் செய்யப்படுவார்கள். அதனடிப்படையில், அடுத்த 3 மாதங்களுக்கான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகளின் பட்டியல் வெளியீடப்பட்டுள்ளது. அதன்படி நீதிபதிகள் M.சத்தியநாராயணன், P. ராஜமாணிக்கம் அமர்வு, பொதுநல மனுக்கள், மேல்முறையீட்டு மனுக்கள், அனைத்துவகை நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை விசாரிப்பர். நீதிபதிகள் K. கல்யாணசுந்தரம், T. கிருஷ்ண வள்ளி அமர்வு அனைத்து வகை ஆட்கொணர்வு மனுக்கள், குற்றவியல் மேல்முறையீட்டு மனுக்கள் மற்றும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிப்பர். மேலும் நீதிபதி V.பாரதிதாசன், ஜாமீன், முன்ஜாமீன் உள்ளிட்ட வழக்குகளை விசாரிக்கிறார். கல்வி, நிலசீர்திருத்தம் , நிலம் கையகப்படுத்துதல் இது தொடர்பான வழக்குகளை நீதிபதி D. கிருஷ்ணகுமார் விசாரிக்கவுள்ளனர் . மோட்டார் வாகன வரி, வரி தொடர்பான வழக்குகள், ஏற்றுமதி- இறக்குமதி தொடர்பான வழக்குகள் , கனிம வளம் தொடர்பான வழக்குகள் , தொழிற்சாலை மற்றும் வனம் தொடர்பான வழக்குகள் உள்ளிட்டவைகளை நீதிபதி G.R. சுவாமிநாதன் விசாரிக்கிறார். குற்றவியல் மேல்முறையீட்டு மனுக்கள், சிபிஐ, ஊழலுக்கு எதிரான வழக்குகளை நீதிபதி B. புகழேந்தி விசாரிக்கிறார்