Home தமிழகம் சிறையில் தந்தை,மகன் உயிரிழந்த விவகாரத்தில் உரிய நீதி வழங்கப்படும் - நீதிபதிகள் கருத்து

சிறையில் தந்தை,மகன் உயிரிழந்த விவகாரத்தில் உரிய நீதி வழங்கப்படும் – நீதிபதிகள் கருத்து

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை மகனான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்ற நிலையில் உயிரிழந்திருக்கின்றனர். காவல்துறையினர் தாக்கியதில் இந்த உயிரிழப்பு நடந்திருக்கும் என பலத்த சந்தேகம் எழுகிறது. இந்த சம்பவத்தை முறையாக விசாரித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிறையில் தந்தை,மகன் உயிரிழந்த விவகாரத்தில் உரிய நீதி வழங்கப்படும் - நீதிபதிகள் கருத்து

சிறையில் தந்தை,மகன் உயிரிழந்த விவகாரத்தில் உரிய நீதி வழங்கப்படும் - நீதிபதிகள் கருத்து

 

நேற்று அவர்களது உடல்களின் பிரேதப் பரிசோதனை முடிந்த நிலையில், அந்த போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் உடல்களை பெற்றுக் கொள்ள மாட்டோம் என்று உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனிடையே உயிரிழந்த ஜெயராஜின் மனைவி உடல்நலம் சரியில்லாமல் போனதால் அவரது மகள் இருவரின் உடல்களையும் பெற்றுக் கொண்டார். அதன் பின்னர் நேற்று மாலை அவர்களது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

சிறையில் தந்தை,மகன் உயிரிழந்த விவகாரத்தில் உரிய நீதி வழங்கப்படும் - நீதிபதிகள் கருத்து

இந்த வழக்கைத் தாமாக முன்வந்து விசாரிக்கும் மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் வழக்கு விசாரணை இன்று மீண்டும் நடந்தது. அப்போது, நீதிமன்ற உத்தரவின் பேரில் தூத்துக்குடி எஸ்.பி நிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார். அதன் பின்னர் பேசிய நீதிபதிகள், தந்தை மகன் உயிரிழப்புக்கு உரிய நீதி கிடைக்கும் என்றும் நீதிமன்றத்தைக் குறைவாக மதிப்பிட வேண்டாம் என்றும் இச்சம்பவம் தொடர்பாக பல வதந்திகள் பரவி வருவதாகவும் கூறினர்.

மேலும், கோவில்பட்டி கிளைச்சிறையின் பதிவேடுகள் மற்றும் மருத்துவ பதிவேடுகளின் புகைப்படத்தை எடுத்து வைக்க வேண்டும் என்றும் அதன் சிசிடிவி காட்சிகளைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் ஜூன் 30 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.

சிறையில் தந்தை,மகன் உயிரிழந்த விவகாரத்தில் உரிய நீதி வழங்கப்படும் - நீதிபதிகள் கருத்து
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

எங்கள கேக்காம திருவிழா நடத்துறீங்களோ… பட்டியலின மக்களை காலில் விழவைத்த ஊர்மக்கள்!

சாதி மதம் இனம் கடந்து மக்கள் சகஜமாக ஒருவரோடு ஒருவர் நெருங்கிப் பழகி வரும் இக்காலகட்டத்தில் கூட, தமிழகத்தின் பல இடங்களில் இன்னமும் பட்டியலின மக்கள் அவமதிக்கப்படும் சம்பவங்கள் அரங்கேறி...

மோடிக்கு கடிதம் எழுதிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி!

தமிழகத்திற்கான ஆக்சிஜன் தேவையை அதிகரித்து வழங்க வேண்டுமென பிரதமர் மோடி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை எதிர்பாராத...

5 கோடி கொரோனா தடுப்பூசிகளை வாங்கும் தமிழ்நாடு அரசு!

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டியதன் அவசியத்தை அறிவியலாளர்களும் ஆட்சியாளர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். அனைத்து மாநிலங்களிலும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மத்திய அரசு தடுப்பூசிகளை...

கொரோனாவால் இறந்த மூதாட்டி : தகனம் செய்வதற்கு முன் எழுந்ததால் அதிர்ச்சி!

கொரோனா தொற்றால் இறந்ததாக மூதாட்டி ஒருவரை தகனம் செய்ய சென்ற போது எழுந்து உட்கார்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- Advertisment -
TopTamilNews