தந்தை-மகன் சிறையில் உயிரிழந்த விவகாரம்.. தாமாக முன்வந்து மதுரை உயர்நீதிமன்றக் கிளை விசாரணை!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் வசித்து வந்தவர் ஜெயராஜ். அவரது மகன் பென்னிஸ். இவர்கள் இருவரும் பழைய பேருந்துநிலையம் காமராஜர் சிலை அருகே செல்போன் மற்றும் மரக்கடை வைத்திருந்த நிலையில், கடந்த 19 ஆம் தேதி ஊரடங்கால் கடையை அடைக்குமாறு போலீசார் கூறியுள்ளனர். அதனால் போலீசாருக்கும் இவர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதால், இரண்டு பேரும் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் பூதாகரமாக உருவெடுத்திருக்கிறது.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 2 எஸ்ஐகளை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி சஸ்பெண்ட் செய்தார். சிறையில் அவர்கள் உயிரிழந்தது மக்களிடையே பெரும் எதிர்ப்பை கிளப்பி வரும் நிலையில், நாளை முழு கடையடைப்பு என்று தமிழ்நாடு வணிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதனிடையே இச்சம்பவம் தொடர்பாக சிறைத்துறை ஏடிஜிபி 4 வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மனித உரிமை ஆணையம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த நிலையில், பூதாகரமாக உருவெடுத்து வரும் தந்தை- மகன் சிறையில் உயிரிழந்த வழக்கை மதுரை உயர்நீதிமன்றக்கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்த உள்ளது. மேலும், இன்று அந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

Most Popular

தேசியக் கொடி அவமரியாதை புகார்… எஸ்.வி.சேகரை விசாரிக்க போலீஸ் திட்டம்! – வழக்கு இப்போதைக்கு இல்லை

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியைப் பற்றி அவதூறாகவும் தேசியக் கொடியை அவமரியாதை செய்தும் எஸ்வி.சேகர் பேசியதாக அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்த சென்னை போலீசார் திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. புதியக்...

“மாற்றத்திற்கான விதை இளைஞர்கள் தான்” : கமல்ஹாசன் இளைஞர் தின வாழ்த்து!

இளைஞர்களின் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை உருவாக்கும் வகையிலும் அவர்களின் திறனை பாராட்டு நோக்கிலும் உலக இளைஞர் தினம் ஆகஸ்ட் 12 ஆம் தேதியான இன்று கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபை 1999-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ம்...

’அமெரிக்காவில் போட்டியிடும் இந்திய-தமிழ்ப் பெண்’ கனிமொழி பெருமிதம்

நவம்பர் மாதம் அமெரிக்காவின அடுத்த தேர்தல் நடக்க விருக்கிறது. அதற்கான ஆயத்த வேலைகளை அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு வருகின்றன. குடியரசுக் கட்சி சார்ப்பில் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் அதிபர் போட்டியில்...

அ.தி.மு.க உறுப்பினர் புதுப்பிப்பு கால அவகாசம் நீட்டிப்பு! – ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் அறிவிப்பு

அ.தி.மு.க உறுப்பினர் புதுப்பிப்பு விண்ணப்பப் படிவங்கள் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் வருகிற 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக இன்று...
Do NOT follow this link or you will be banned from the site!