குரூப் 1 தேர்வில் 20% ஒதுக்கீடு- உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு

 

குரூப் 1 தேர்வில் 20% ஒதுக்கீடு- உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு

குரூப் 1 தேர்வில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கான 20% ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

குரூப் 1 தேர்வில் 20% ஒதுக்கீடு- உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு

மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த சக்தி ராவ் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2019 ஜனவரி 1ஆம் தேதி துணை ஆட்சியர், டிஎஸ்பி, வணிகவரி அலுவலர் உள்ளிட்ட 181 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுத்தது. தமிழ் வழியில் கல்வி பயின்றதற்கான ஒதுக்கீட்டிலும் நான் தேர்வு செய்யப்படவில்லை.

இது குறித்து விசாரித்தபோது தமிழ்வழியில் கல்வி பயின்றதற்கான இட ஒதுக்கீட்டு சலுகை, தொலைநிலை கல்வியில் பயின்றவருக்கும் வழங்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதற்கு தடை விதிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி, 1 முதல் 12ஆம் வகுப்பு மற்றும் விண்ணப்பங்களில் கோரப்பட்டுள்ள தகுதி போன்ற முழு கல்வியையும் தமிழ் மொழியில் பயின்றவர்களுக்கு மட்டும் 20% இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட்டார்.

குரூப் 1 தேர்வில் 20% ஒதுக்கீடு- உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு

இதனை எதிர்த்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், 2020 குரூப்-1 தேர்வில், ஒன்று முதல் பட்டப்படிப்பு வரை தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு மட்டும் 20% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற உத்தரவை செயல்படுத்துவதில் இருந்து விலக்கு அளித்து உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி கிருபாகரன் தலைமையிலான அமர்வு, டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்றவர்களில், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% ஒதுக்கீட்டு நடைமுறையை தொடர்ந்து பின்பற்றவேண்டுமென உத்தரவிட்டு, டிஎன்பிஎஸ்-யின் மனுவை தள்ளுபடி செய்தனர்.