மதுரையில் முழு ஊரடங்கு என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை- மாவட்ட நிர்வாகம்

 

மதுரையில் முழு ஊரடங்கு என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை- மாவட்ட நிர்வாகம்

சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களைத் தொடர்ந்து மதுரை மாவட்டத்திலும் ஜூன் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு பிறப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அரசு தரப்பில் இதுபற்றி ஆலோசனை நடந்துகொண்டிருந்தது. விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வியாபாரிகள் தாங்களாக முன்வந்து கடைகளை காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை திறந்து வைக்கப்போவதாக அறிவித்தனர். இதனால் நம்முடைய டாப் தமிழ் நியூஸ் செய்தி முதற்கொண்டு அனைத்து செய்தி சேனல்களிலும் மதுரையில் நாளை முதல் வருகிற 30ம் தேதி வரை ஏழு நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக செய்திகள் வெளியிடப்பட்டது.

மதுரையில் முழு ஊரடங்கு என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை- மாவட்ட நிர்வாகம்

இந்நிலையில் மதுரையில் நாளை நள்ளிரவு முதல் தீவிர ஊரடங்கு அமல் படுத்தப்படும் என அரசு ஆணை ஒன்றை குறிப்பிட்டு வெளியாகியுள்ள தகவல் அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்றும், சம்பந்தப்பட்ட ஆணையில் எந்த தேதியும் குறிப்பிடப்படவில்லை என்றும் மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.