“அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது பிச்சைக்கு சமம்” நீதிபதிகள் ஆவேசம்!

 

“அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது பிச்சைக்கு சமம்” நீதிபதிகள் ஆவேசம்!

அரசு அதிகாரிகள் ஊதியத்தை தாண்டி லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அறுவடை செய்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த நெற்பயிர்கள் மழையில் நனைந்து முளைத்து விடுவதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்தனர். நெற்பயிர்களை விற்பனை செய்யும் கொள்முதல் நிலையங்களையும் அரசு மூடி வைத்திருப்பதாக குற்றஞ்சாட்டியிருந்தனர். இதனையடுத்து பல மாவட்டங்களில் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, விவசாயிகளிடம் இருந்து நெற்பயிர்கள் கொள்முதல் செய்யப்பட்டது.

“அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது பிச்சைக்கு சமம்” நீதிபதிகள் ஆவேசம்!

இது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தொடரப்பட்ட வழக்கு, நீதிபதிகள் புகழேந்தி மற்றும் கிருபாகரன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நெல் மூட்டைக்கு ரூ.40 லஞ்சம் பெறப்படுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பளத்தை தாண்டி அரசு அதிகாரிகள் லஞ்சம் பெறுவது பிச்சை எடுப்பதற்கு சமம் என நீதிபதிகள் கருத்து தெரிவித்த நீதிபதிகள், லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என கேள்வி எழுப்பினர்.

“அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது பிச்சைக்கு சமம்” நீதிபதிகள் ஆவேசம்!

தொடர்ந்து, விவசாயிகள் கொண்டு வரும் நெற்பயிர்கள் முளைத்தால் அதற்கான பணத்தை அதிகாரிகளிடம் வசூலிக்க வேண்டும், அப்போது தான் இது போன்ற நிகழ்வுகள் தவிர்க்கப்படும் என்று கூறினர். மேலும் நெல் கொள்முதல் செய்ய மாற்று வழிகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு தொடர்பாக நுகர்பொருள் வாணிபக் கழக இயக்குனர் நாளை விளக்கம் அளிக்க வேண்டும் என ஆணை பிறப்பித்தனர்.