காவல்துறையினர் நடத்தை விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும்- நீதிமன்றம் அறிவுரை!

 

காவல்துறையினர் நடத்தை விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும்- நீதிமன்றம் அறிவுரை!

காவல்துறை படைகளில் பணியாற்றுபவர்கள் நடத்தை விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் என நீதிபதிகள் அறிவுரை வழங்கியுள்ளனர்.

மதுரையைச் சேர்ந்த தலைமைக் காவலர் ஏ.பால்ராஜ்பாண்டியன் மீது பணியில் ஓழுங்காக நடந்து கொள்ளாதது, ஒரு பெண்ணை ஏமாற்றியது என பல புகார்கள் எழுந்ததால் அவர் மீது குடும்ப வன்முறை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதன் பிறகு பால்ராஜ்பாண்டியன் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டாலும் துறை ரீதியான விசாரணையில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபனமானதால் கட்டாய ஓய்வு வழங்க பரிந்துரை செய்யப்பட்ட நிலையில், 2 ஆண்டுகளுக்கு ஊதிய உயர்வு கிடையாது என உத்தரவிடப்பட்டது.

காவல்துறையினர் நடத்தை விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும்- நீதிமன்றம் அறிவுரை!

இதனை எதிர்த்து, தனது பணி மூப்பை கணக்கீடு செய்து பணப்பலன்கள் தரக்கோரி பால்ராஜ்பாண்டியன் மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் வழக்குத்தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை போன்ற ஒழுக்கமான படைகளில் பணிபுரிபவர்கள் நடத்தை விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் நேர்மை மற்றும் தூய்மையுடன் பணியாற்ற வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

மேலும், காவல்துறையினர் நடத்தை விதிகளை மீறினால் மக்களுக்கும் காவல்துறை மீதான நம்பிக்கை போய்விடும் என கூறிய நீதிபதிகள், பால்ராஜ்பாண்டியனுக்கு குறைவான தண்டனையே வழங்கப்பட்டிருப்பதால் அதில் தலையிட எந்த முகாந்திரமும் இல்லை என நஉத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்துள்ளனர்.