‘தமிழகமே மதுவில் மூழ்கியுள்ளது’ : ஐகோர்ட் கிளை நீதிபதிகள் காட்டம்!

‘தமிழகமே மதுவில் மூழ்கியுள்ளது’ : ஐகோர்ட் கிளை நீதிபதிகள் காட்டம்!

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்த வேண்டுமென மதுரை உயர்நீதிமன்றக் கிளை நீதிபதிகள் தெரிவித்தனர்.

‘தமிழகமே மதுவில் மூழ்கியுள்ளது’ : ஐகோர்ட் கிளை நீதிபதிகள் காட்டம்!

மதுரையில் டாஸ்மாக் கடையை அகற்ற கோரி முகம்மது என்பவர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று, நீதிபதிகள் புகழேந்தி மற்றும் கிருபாகரன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகம் மதுவில் மூழ்கியுள்ளது குறித்து அரசு கவலை கொள்வதில்லை. ஆறுகளில் தண்ணீர் ஓடுகிறதோ இல்லையோ.. மூலைமுடுக்குகளில் மதுபானம் ஆறாக ஓடுகிறது. பள்ளிக்கூடம், குடியிருப்பு அருகே வைப்பதற்கு டாஸ்மாக் ஒன்றும் புத்தகக்கடையோ, மளிகைகடையோ இல்லை என நீதிபதிகள் காட்டமாக தெரிவித்தனர்.

‘தமிழகமே மதுவில் மூழ்கியுள்ளது’ : ஐகோர்ட் கிளை நீதிபதிகள் காட்டம்!

தொடர்ந்து, பெண் குழந்தைகளின் கண்ணீரைத் துடைக்கும் வகையில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்றும் மதுவிலக்கை அமல்படுத்தினால் குற்றங்கள் குறையும், தனிநபர் வருமானம் உயரும், குடிமகன்களின் உடல்நிலை ஆரோக்கியம் அடையும் என்றும் கருத்து தெரிவித்தனர். மேலும், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்த வேண்டும் என்று அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், நீதிமன்றத்தின் யோசனையை தமிழக அரசு கவனிக்குமா? என்றும் கேள்வி எழுப்பினர்.