“பாஜக கலகம் மூலம் அரசியல் ஆதாயம் தேடுகிறது” – முத்தரசன் குற்றச்சாட்டு

“பாஜக கலகம் மூலம் அரசியல் ஆதாயம் தேடுகிறது” – முத்தரசன் குற்றச்சாட்டு

மதுரை

தமிழகத்தில் கலகம் மூலமாக மக்களை மோதவிட்டு, பேசாததை பேசியதாக கூறி, பாஜக அரசியல் ஆதாயம் தேட முயல்வதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார். மதுரை ஒத்தக்கடை பகுதியில் நடந்த விவசாயிகள், தொழிலாளர்கள் விழிப்புணர்வு கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார். மேலும், ஆடுகள் மோதிக்கொள்ள வேண்டும், அதன் ரத்தத்தை

“பாஜக கலகம் மூலம் அரசியல் ஆதாயம் தேடுகிறது” – முத்தரசன் குற்றச்சாட்டு

ருசித்துக்கொள்ள வேண்டும் என தந்திர நரி விரும்புவது போல பாஜக விரும்புவதாகவும், அந்த முயற்சியை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றும் முத்தரசன் கூறினார். மேலும், விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை பா.ஜ.க இயற்றிவிட்டு அதனை நியாயப்படுத்துவது போல திரும்ப, திரும்ப பேசுவது ஒருபோதும் வெற்றிபெறாது என்று கூறிய அவர்,

“பாஜக கலகம் மூலம் அரசியல் ஆதாயம் தேடுகிறது” – முத்தரசன் குற்றச்சாட்டு

வேளாண் சட்டங்களுக்கு எதிராக வரும் நவம்பர் 26 ஆம் தேதி தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள நாடு தழுவிய பொதுவேலைநிறுத்த போராட்டத்தை ஆதரித்து தமிழகம் ஸ்தம்பிக்கும் அளவில் நிச்சயமாக போராட்டம் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.