மதுரை வீராங்கனை ரேவதி ஒலிம்பிக்கிற்கு தகுதி!

 

மதுரை வீராங்கனை ரேவதி ஒலிம்பிக்கிற்கு தகுதி!

மதுரையை சேர்ந்த தடகள வீராங்கனை ரேவதி டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்று சாதனை படைத்துள்ளார்.

மதுரை வீராங்கனை ரேவதி ஒலிம்பிக்கிற்கு தகுதி!

வருகின்ற 23ஆம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தொடங்க உள்ளன. இதில் நூற்றுக்கணக்கான இந்திய வீரர் வீராங்கனைகள் பங்கேற்று தங்கள் திறமையை நிரூபிக்க காத்திருக்கின்றனர். குறிப்பாக இந்த ஒலிம்பிக் போட்டியில் பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம், இந்திய ஹாக்கி அணி கேப்டன் மன்பிரீத் சிங்கும் தேசிய கொடி ஏந்தி செல்ல உள்ளதாக இந்திய ஒலிம்பிக் சங்கம் தெரிவித்துள்ளது. அதேபோல் ஒலிம்பிக் நிறைவு விழாவான ஆகஸ்ட் 8ஆம் தேதி மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தேசியக் கொடியை ஏந்திச் செல்ல உள்ளார். இந்த உணர்ச்சிமிகு காட்சிகளை காண ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்நோக்கி காத்திருக்கிறது.

மதுரை வீராங்கனை ரேவதி ஒலிம்பிக்கிற்கு தகுதி!

இந்நிலையில் மதுரையை சேர்ந்த ரேவதி ஷூ கூட இல்லாமல் வெறும் காலில் பயிற்சி செய்து ஒலிம்பிக் கனவை அடைந்துள்ளார்.சிறு வயதில் பெற்றோரை இழந்த ரேவதி தனது பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து கனவை நிறைவேற்றியுள்ளார். பயிற்சியாளர் கண்ணன் அளித்த ஊக்கத்தால் பல போட்டிகளில் வெற்றிகளை தன்வசம் ஆக்கியுள்ளார் ரேவதி. ஜூனியர் – சீனியர் பிரிவில் மாநில, தேசிய போட்டிகளில் வெற்றிகளை குவித்த ரேவதி டோக்கியோ செல்கிறார். 2 முதல் 12 ஆம் வகுப்பு வரை விடுதியில் தங்கி படித்த ரேவதி ஓட்டப்பந்தயத்தில் சிறப்பாக கூடியவர். காயத்திலிருந்து மீண்டு வந்த தேவதை தற்போது ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இவர் டோக்கியோ ஒலிம்பிக்கில் 4x 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.முன்னதாக தமிழ்நாட்டைச் சேர்ந்த பவானி தேவி, வாள்வீச்சு போட்டிக்காக ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.