மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி நிறைவு!

 

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி நிறைவு!

உலகப்புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது.

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி நிறைவு!

மதுரை மாவட்டத்தின் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லக்கட்டு இன்று காலை தொடங்கியது. இதனை முதல்வர் பழனிசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகளை பக்குவமாக அடக்க, 300க்கும் மேற்பட்ட வீரர்கள் களமிறங்கினர். ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் போட்டியில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் அண்டா முதல் தங்கக் காசுகள் வரை பரிசாக வழங்கப்பட்டது. போட்டியில் பங்கேற்ற பல காளைகள் வீரர்களின் பிடியில் சிக்காமல் சீறிப் பாய்ந்துச் சென்றது என்றே தான் சொல்ல வேண்டும்.

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி நிறைவு!

இந்த நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு கட்ட நடவடிக்கைகளுடன் நடந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது. போட்டியின் முடிவில், 12 காளைகளை அடக்கிய விராட்டிபத்து கிராமத்தை சேர்ந்த கண்ணன் என்பவருக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. மொத்தமாக 719 காளைகள் வாடிவாசல் வழியாக திறக்கப்பட்ட நிலையில், 700 மாடுபிடி வீரர்கள் காளைகளை அடக்க களமிறங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.