அழகர் கோவில் ஆடி தேரோட்டம் நடத்த வழக்கு! – தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிமன்றம்

 

அழகர் கோவில் ஆடி தேரோட்டம் நடத்த வழக்கு! – தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிமன்றம்

மதுரை மாவட்டம் அழகர் கோவில் ஆடித் தேரோட்டத்தை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.
மதுரை அழகர் கோவில் தேரோட்டம் வருகிற 3ம் தேதி நடைபெற வேண்டும். பூரி ஜெகன்னாதர் கோவில் தேரோட்டத்தை நடத்த கள்ளழகர் கோவில் தேரோட்டத்தையும்

அழகர் கோவில் ஆடி தேரோட்டம் நடத்த வழக்கு! – தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிமன்றம்நடத்த உத்தரவிட வேண்டும் என்று மதுரை மேலூரைச் சேர்ந்த ஸ்டாலின் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது வழக்கறிஞர் ஸ்டாலின், மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து பூரி ஜெகன்னாதர் கோவிலில் நடந்தது போன்று இங்கும் தேரோட்ட அனுமதிக்க வேண்டும் என்றார்.

அழகர் கோவில் ஆடி தேரோட்டம் நடத்த வழக்கு! – தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிமன்றம்அறநிலையத் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “ஆகஸ்ட் 3ம் தேதி ஊரடங்கு உள்ளதா, இல்லையா என்று தெரியவில்லை. தேரோட்டம் நடந்தால் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது கடினமாகிவிடும். மேலும் பாதுகாப்பு வழங்குவதிலும் பிரச்னை ஏற்படும்.

அழகர் கோவில் ஆடி தேரோட்டம் நடத்த வழக்கு! – தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிமன்றம்தேரோட்டத்துக்குப் பதில் பரிகாரமாக உற்சவரைச் சப்பரத்தில் வைத்து ரத வீதிகளில் ஊர்வலம் கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை நேரலையில் ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார். இதை ஏற்ற நீதிபதிகள் வழக்கறிஞர் ஸ்டாலின் தொடர்ந்த மனுவைத் தள்ளுபடி செய்தனர்.