முதல்வர் வேட்பாளராக எடப்பாடியை அறிவித்ததன் மூலம் அதிமுக என்றும் தொண்டர்களுடையது என்பதை ஓபிஎஸ் நிரூபித்துள்ளார்- மதுரை ஆதீனம்

 

முதல்வர் வேட்பாளராக எடப்பாடியை அறிவித்ததன் மூலம் அதிமுக என்றும் தொண்டர்களுடையது என்பதை ஓபிஎஸ் நிரூபித்துள்ளார்- மதுரை ஆதீனம்

முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியை அறிவித்தது அனைவரும் ஏற்றுக் கொள்ளத்தக்க மாபெரும் அறிவிப்பு என மதுரை ஆதீனம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுகவில் நீடித்து வந்த முதல்வர் வேட்பாளர் சர்ச்சை முடிவுக்கு வந்திருக்கிறது. நான் தான் போட்டியிடுவேன் என ஈபிஎஸ் உடன் சண்டையிட்ட, ஓபிஎஸ்ஸே அடுத்த முதல்வர் வேட்பாளர் பழனிசாமி தான் என அறிவித்து விட்டார். அதே போல, ஓபிஎஸ் முன்வைத்த கோரிக்கையான 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைக்கப்படுவது நிறைவேற்றப்பட்டது. அதிமுகவை இரண்டாக பிளக்கும் அளவுக்கு பூதாகரமாக உருவெடுத்த இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருப்பதால் அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

முதல்வர் வேட்பாளராக எடப்பாடியை அறிவித்ததன் மூலம் அதிமுக என்றும் தொண்டர்களுடையது என்பதை ஓபிஎஸ் நிரூபித்துள்ளார்- மதுரை ஆதீனம்

இந்நிலையில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள மதுரை ஆதீனம், “2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை முதல்வர் வேட்பாளராக அறிவித்தது அனைவரும் ஏற்றுக் கொள்ளத்தக்க மாபெரும் அறிவிப்பாகும். இந்த அறிவிப்பின் மூலம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்றும் தொண்டர்களுடையது என்பதை ஓபிஎஸ் நிரூபித்துள்ளார். வருகின்ற 2021 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைப்பதற்கு நமது ஓபிஎஸ் அவர்களும் ஈபிஎஸ் அவர்களும் துணை நின்று வெற்றிப் பெறுவார்கள். ஆட்சி சிறப்பாக அமையும். ஒன்றரைக் கோடி தொண்டர்களுக்கும், தமிழகத்தில் இருக்கின்ற அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் நிர்வாகிகளுக்கும், பொறுப்பாளர்களுக்கும் சன்னிதானத்தின் ஆசீர்வாதம் ” எனக் குறிப்பிட்டுள்ளார்.