• February
    26
    Wednesday

Main Area

Main



ஹெச்.ராஜாவுக்காக மதுரை ஆதீனம் எவ்வளவு பெரிய ரிஸ்க் எடுக்கிறார் பாருங்க...!

மதுரை ஆதீனம் (கோப்புப்படம்)
மதுரை ஆதீனம் (கோப்புப்படம்)

பக்திப் பரவசங்களுக்கு மத்தியில் அவ்வப்போது அரசியலிலும் தனது மூக்கை நுழைத்து அட்டகாசம் செய்துவரும் மதுரை ஆதீனம் அருணகிரியார் பா.ஜ.க. வேட்பாளர் ஹெச். ராஜாவின் வெற்றிக்காக விஷேச பிரார்த்தனைகள் செய்து வருவதாகக் கூறி எதிர்க் கட்சியினரை கலங்கடித்து வருகிறார்.

சிவகங்கை மக்களவைத் தொகுதியில், திமுக, அதிமுக மற்றும் அமமுக இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. இங்கு, திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளராக சிதம்பரத்தின் வாரிசு கார்த்தி சிதம்பரம், அதிமுக கூட்டணி பாஜக வேட்பாளராக  ஹெச்.ராஜா, அமமுக வேட்பாளராக  தேர்போகி பாண்டி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்களில் ஒட்டுமொத்த தமிழகத்தின் செல்லப்பிள்ளையான ஹெச்.ராஜாவை டெபாசிட் கூட வாங்கமுடியாமல் தோற்கடியுங்கள் என்றொரு பிரச்சாரம் வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

h raja

இந்நிலையில்,அத்தகைய பேராபத்திலிருந்து அவரைக் காப்பாற்றும்பொருட்டு, ஹெச்.ராஜா தேர்தலில் அமோக வெற்றி பெற வேண்டி பிரார்த்தனை செய்வதாக மதுரை ஆதீனம் அறிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பேசிய அவர், ‘பாஜக தலைவர் பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும் எனப் பிராத்திக்கிறேன். தமிழகத்தில் அதிமுக மீண்டும் ஆட்சி அமைய வேண்டும். அதிமுக கூட்டணியில் போட்டியிடுகின்ற பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா தேர்தலில் அமோக வெற்றி பெற வேண்டி எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறேன். இதுவே, எனது விருப்பம்’ எனத் தெரிவித்தார்.

chidambaram , karti

தமிழகத்தில் கட்சிபேதமின்றி தோற்கடிக்கப்படவேண்டிய 5 வேட்பாளர்கள் என்று பிரச்சாரம் செய்யப்படும் பட்டியலில் தொடர்ந்து முதல் இடம் பிடித்து வரும் ஹெச்.ராஜாவுக்கு ஆதீனத்தின் பிரார்த்தனை எந்த அளவுக்கு ஒர்க் அவுட் ஆகிறது என்று தெரிந்துள்ள மே 23 வரை காத்திருந்துதான் ஆகவேண்டும்.

இதையும் வாசிங்க

’சின்னம்மா செத்துட்டாங்க’...மேடையில் உளறிக்கொட்டிய டி.டி.வி அணி நடிகர்...

2018 TopTamilNews. All rights reserved.