மதுரை: கொரோனா விதி பின்பற்றி எரிக்கப்பட்ட உடல்கள் 347… அரசு அறிவிப்பில் 97 இருப்பது எப்படி? – தி.மு.க எம்.எல்.ஏ கேள்வி

மதுரை: கொரோனா விதி பின்பற்றி எரிக்கப்பட்ட உடல்கள் 347… அரசு அறிவிப்பில் 97 இருப்பது எப்படி? – தி.மு.க எம்.எல்.ஏ கேள்வி

மதுரை, கொரோனா விதி பின்பற்றி எரிக்கப்பட்ட உடல்கள் 347, அரசு அறிவிப்பில்
மதுரையில் உள்ள தத்தநேரி, மூலக்கரை மின் மயானங்களில் கொரோனா விதிகளை பின்பற்றி எரியூட்டப்பட்ட உடல்களின் எண்ணிக்கை 347 ஆக இருக்கும்போது, மதுரையில் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 97 என அரசு கூறுவது எப்படி என தி.மு.க எம்.எல்.ஏ பி.டி.ஆர்.பி.தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரை: கொரோனா விதி பின்பற்றி எரிக்கப்பட்ட உடல்கள் 347… அரசு அறிவிப்பில் 97 இருப்பது எப்படி? – தி.மு.க எம்.எல்.ஏ கேள்வி
இது தொடர்பாக அவர் கூறுகையில், மதுரையில் கொரோனா பாதிப்பு பற்றி தமிழக அரசு தவறான தகவலை வெளியிட்டு வருகிறது. மதுரை மின் மயானங்களில் எரியூட்டப்பட்ட கொரோனா பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கையும் அரசு வெளியிட்ட அறிவிப்பிலும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. இது குறித்து மதுரை கலெக்டர் விரிவான விளக்கம் அளிக்க வேண்டும்.
இரண்டு மின் மயானங்களும் 24 மணி நேரமும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா காரணமாக

மதுரை: கொரோனா விதி பின்பற்றி எரிக்கப்பட்ட உடல்கள் 347… அரசு அறிவிப்பில் 97 இருப்பது எப்படி? – தி.மு.க எம்.எல்.ஏ கேள்வி

உயிரிழப்பவர்கள் உடல்கள் இங்கே அனுப்பப்படுகிறது. தாத்தனேரியில் நடத்தப்பட்ட ஆய்வில் ஜூலை 15 நிலவரப்படி கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி மொத்தம் 305 உடல்கள் எரியூட்டப்பட்டுள்ளன. மூலக்கரையில் 42 உடல்கள் எரியூட்டப்பட்டுள்ளது. ஆனால் அரசு அறிவிப்பில் 97 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புள்ளிவிவரம் இந்த இரு மின் மயானங்களில்

மதுரை: கொரோனா விதி பின்பற்றி எரிக்கப்பட்ட உடல்கள் 347… அரசு அறிவிப்பில் 97 இருப்பது எப்படி? – தி.மு.க எம்.எல்.ஏ கேள்வி

நிகழ்த்தப்பட்ட மொத்த இறுதிச் சடங்கின் எண்ணிக்கை இல்லை. இது தவிர எரியூட்டப்பட்ட சடலங்கள் எண்ணிக்கை வேறு தனியாக உள்ளது. அரசு அறிவிப்புக்கும் உயிரிழப்புக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. இது பற்றி அரசு விளக்க வேண்டும்” என்றார்.