9 மாவட்டங்களில் நீதிமன்றங்களை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி!

9 மாவட்டங்களில்  நீதிமன்றங்களை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் விசாரணையில் உள்ள வழக்குகளை வீடியோ கான்பரன்சிங் மூலம் மட்டுமே விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

9 மாவட்டங்களில்  நீதிமன்றங்களை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி!

ஆனால் தற்போது பார் கவுன்சில் கோரிக்கை, முதன்மை அமர்வு நீதிபதிகளின் கருத்துக்கு ஏற்ப, அனைத்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதிகளும், நீதிமன்ற அறையில் வீடியோ கான்பரன்சிங் மூலம் வழக்கை விசாரிக்க அனுமதியளித்துள்ளது.

9 மாவட்டங்களில்  நீதிமன்றங்களை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி!
இந்நிலையில் தருமபுரி, நீலகிரி, கிருஷ்ணகிரி, திருவாரூர், ராமநாதபுரம், தேனி, நாகை, கரூர், சிவகங்கை போன்ற மாவட்டங்களில் ஜூன் 1 முதல் நீதிமன்றங்கள் செயல்பட சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஐந்து வழக்கறிஞர்களை மட்டுமே நீதிமன்ற அறைக்குள் அனுமதிக்க வேண்டும் எனவும், வழக்கு தொடர்ந்தவர்களை அனுமதிக்க கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட நிர்வாகத்துடன் சேர்ந்து நீதிமன்ற அறைகளைபாதுகாப்புடன் வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் இன்னும் இரண்டு வாரங்களில் இந்த முடிவு மீண்டும் மறுபரிசீலனை செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.