தமிழக அரசை கேட்காமல் ஆந்திராவுக்கு ஆக்சிஜன் சப்ளை… விவகாரத்தை கையிலெடுத்து உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தமிழக அரசை கேட்காமல் ஆந்திராவுக்கு ஆக்சிஜன் சப்ளை… விவகாரத்தை கையிலெடுத்து உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

கொரோனா இரண்டாம் அலையால் இந்தியாவே நிலைகுலைந்துள்ளது. முதல் அலையைக் காட்டிலும் தற்போது கொரோனா அதிக வீரியத்துடன் பரவிவருகிறது. இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் மருத்துவக் கட்டமைப்பு ஆட்டம் கண்டுள்ளது. நாட்டின் முன்னோடி மாநிலமாக திகழும் தமிழ்நாட்டிலும் பெரிதாக இல்லாவிட்டாலும் ஆங்காங்கே பிரச்சினைகள் இருக்கின்றன. வேலூரில் ஆக்சிஜன் இல்லாமல் 7 பேர் உயிரிழந்ததாகக் கூறப்பட்டதை உதாரணமாகச் சொல்லலாம்.

தமிழக அரசை கேட்காமல் ஆந்திராவுக்கு ஆக்சிஜன் சப்ளை… விவகாரத்தை கையிலெடுத்து உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

இச்சூழலில் சென்னையிலுள்ள நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட 45 மெட்ரிக் டன் ஆக்சிஜனை ஆந்திராவிற்கும் தெலங்கனாவிற்கும் மத்திய அரசு அனுப்பியுள்ளதாக தமிழ்நாடு அரசு குற்றஞ்சாட்டியுள்ளது. தமிழ்நாடு அரசுக்கே தெரியாமல் இது நடந்திருப்பது தான் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதுதொடர்பாக மத்திய அரசிடம் முறையிடப் போவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியிருந்தார். திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கடுமையாக விமர்சித்திருந்தனர்.

தமிழக அரசை கேட்காமல் ஆந்திராவுக்கு ஆக்சிஜன் சப்ளை… விவகாரத்தை கையிலெடுத்து உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

இச்சூழலில் இந்த விவகாரத்தை சென்னை உயர் நீதிமன்றம் கையிலெடுத்துள்ளது. இந்த வழக்கைத் தாமாக விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம், தமிழ்நாடு அரசிடம் கலந்தாலோசிக்காமல் ஏன் ஆக்சிஜனை வேறு மாநிலங்களுக்கு சப்ளை செய்தீர்கள் என்பது குறித்து பதிலளிக்க மத்திய அரசுக்கு தலைமை நீதிபதி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. வழக்கு பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணைக்கு வருகிறது.