“வழக்கை விசாரிக்க தடைவிதிக்க முடியாது”- ராமதாஸ் கோரிக்கையை ஏற்க மறுத்த உயர் நீதிமன்றம்!

“வழக்கை விசாரிக்க தடைவிதிக்க முடியாது”-  ராமதாஸ் கோரிக்கையை ஏற்க மறுத்த உயர் நீதிமன்றம்!

2012ஆம் ஆண்டு மே 5ஆம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெற்ற வன்னிய இளைஞர் பெருவிழா பொதுக்கூட்டத்தை அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து நடத்தியதாக, மாமல்லபுரம் காவல் நிலையத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் ஜி.கே. மணி, துணைப் பொதுச்செயலாளர் திருக்கச்சூர் ஆறுமுகம், இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், வன்னியர் சங்கத் தலைவர் ஜெ. குரு உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

“வழக்கை விசாரிக்க தடைவிதிக்க முடியாது”-  ராமதாஸ் கோரிக்கையை ஏற்க மறுத்த உயர் நீதிமன்றம்!

செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், ஜி.கே.மணி, திருக்கச்சூர் ஆறுமுகம் ஆகிய நால்வரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கவும் கோரியிருந்தனர். இந்த மனு நீதிபதி எம். நிர்மல்குமார், முன் விசாரணைக்கு வந்தது.

“வழக்கை விசாரிக்க தடைவிதிக்க முடியாது”-  ராமதாஸ் கோரிக்கையை ஏற்க மறுத்த உயர் நீதிமன்றம்!

அப்போது செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என பாமக தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து நீதிபதி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்து, நேரில் ஆஜராவதிலிருந்து விலக்களித்து உத்தரவிட்டார். மேலும், மனு தொடர்பாக மாமல்லபுரம் டி.எஸ்.பி., காவல் நிலைய ஆய்வாளர் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜூலை 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.