Home தமிழகம் சிவசங்கர் பாபாவுக்கு உடந்தையாக இருந்த 3 பெண்கள் முன்ஜாமீன் மனு - உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!

சிவசங்கர் பாபாவுக்கு உடந்தையாக இருந்த 3 பெண்கள் முன்ஜாமீன் மனு – உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள சுசில்ஹரி சர்வதேச பள்ளியில் படித்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யபட்டுள்ளார். மாணவிகளை மூளைச் சலவை செய்ததாக அவரது பக்தை சுஷ்மிதாவும் கைது செய்யப்பட்டுள்ளர். இந்நிலையில் இந்த வழக்கில் தேடப்பட்டு வரும், பள்ளி நிர்வாகி ஜானகி சினிவாசன், அவரது மருமகள் பாரதி, பள்ளி ஆசிரியை தீபா வெங்கடராமன் ஆகியோர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

சிவசங்கர் பாபாவுக்கு உடந்தையாக இருந்த 3 பெண்கள் முன்ஜாமீன் மனு - உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!
சிவசங்கர் பாபா டெல்லியில் கைது: வலுக்கும் பாலியல் தொந்தரவு புகார்கள் - யார்  இவர்? - BBC News தமிழ்

இந்த மனுக்கள் நீதிபதி எம்.தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், புகார்தாரரின் வாக்குமூலம் மாஜிஸ்திரேட் முன்பாக நேற்று பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டுமென கோரிக்கை வைத்தார். மேலும் தீபாவின் முன் ஜாமீன் தவிர மற்ற இருவரது வழக்குகளில் சிபிசிஐடி-யை எதிர்மனுதாரராக சேர்க்கவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீவ் பானர்ஜி நியமனம்- Dinamani

மூவரின் முன் ஜாமீன் மனுக்களுக்கும் சிபிசிஐடி காவல்துறையிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு அறிவுறுத்திய நீதிபதி, திருத்த மனுக்களை தாக்கல் செய்ய இரு மனுதாரர்களுக்கும் அறிவுறுத்தி விசாரணையை ஜூலை 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

சிவசங்கர் பாபாவுக்கு உடந்தையாக இருந்த 3 பெண்கள் முன்ஜாமீன் மனு - உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

ஒலிம்பிக்ஸ் 2021: டென்னிஸில் நாக்அவுட்டாகி வெளியேறியது சானியா மிர்சா ஜோடி!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக்ஸ் போட்டி ஜூலை 23ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. கொரோனா அச்சுறுத்தல்களையும் தாண்டி சவாலுடன் ஒலிம்பிக்ஸ் நடத்தப்படுகிறது. 205 நாடுகளில் இருந்து 11,300 வீரர், வீராங்கனைகள்...

இளம்பெண் தலையில் அம்மிக் கல்லைப் போட்டு… கொடூரமாக கொலை செய்த இளைஞர்!

பட்டுக்கோட்டை அருகே ஒரு தலைக் காதல் விவகாரத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை இளைஞர் ஒருவர் கல்லால் தாக்கி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர்...

அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்; அதிர்ச்சி தரும் சுகாதாரத்துறை ரிப்போர்ட்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 535 பேர் கொரோனாவால் உயிரிழந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை கட்டுக்குள்...

சிக்கினார் அதிமுக எம்.ஆர்.விஜயபாஸ்கர்… சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு!

போக்குவரத்துறை அமைச்சராக இருந்த போது 55% அதிகமாக சொத்துக்களை சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது சொத்துகுவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில்...
- Advertisment -
TopTamilNews