“ஆட்சியமைப்பதற்கு முன்பே 3 எம்எல்ஏக்களை நியமித்த மத்திய அரசு” – வழக்கில் உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

“ஆட்சியமைப்பதற்கு முன்பே 3 எம்எல்ஏக்களை நியமித்த மத்திய அரசு” – வழக்கில் உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

புதுவை சட்டப்பேரவை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக மொத்தமுள்ள 30 தொகுதிகளில் 10 தொகுதிகளைக் கைப்பற்றிய என்ஆர் காங்கிரஸ், பாஜக எம்எல்ஏக்கள் 6 பேர் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உள்ளது. புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி கடந்த 7ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் திடீரென்று கொரோனாவால் பாதிக்கப்பட்டதால், கே.வெங்கடேசன், வி.பி.ராமலிங்கம், ஆர்.பி.அசோக் பாபு ஆகிய மூவரை நியமன எம்எல்ஏக்களாக நியமித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.

“ஆட்சியமைப்பதற்கு முன்பே 3 எம்எல்ஏக்களை நியமித்த மத்திய அரசு” – வழக்கில் உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

இந்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரியும் இந்த உத்தரவை அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என அறிவிக்கக்கோரி புதுச்சேரி கரிக்கலம்பாக்கம் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் ஜெகநாதன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த், செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் மே 20ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுப் பணியில் இருப்பவர்களை நியமன உறுப்பினர்களாக நியமிக்க மட்டுமே தடை உள்ளதாகவும், இவர்கள் நியமனத்தில் எந்த சட்டவிரோதமும் இல்லை எனவும் மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணனும் வாதிட்டனர்.

“ஆட்சியமைப்பதற்கு முன்பே 3 எம்எல்ஏக்களை நியமித்த மத்திய அரசு” – வழக்கில் உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

அரசியல் உள்நோக்கத்துடன் தாக்கல் செய்த மனுவை ஏற்க கூடாது என நியமன எம்.எல்.ஏ.க்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர். இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டுள்ளனர்.