ராஜேஷ் தாஸின் பாலியல் வழக்கு… 6 வாரத்துக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு!

ராஜேஷ் தாஸின் பாலியல் வழக்கு… 6 வாரத்துக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு!

முதலமைச்சர் பழனிசாமிக்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் எஸ்பிக்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக டிஜிபி திரிபாதியிடம் பாதிக்கப்பட்ட பெண் எஸ்பி புகார் அளித்தார். இதையடுத்து சிறப்பு டிஜிபி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவர் மீது சிபிசிஐடி 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ராஜேஷ் தாஸின் பாலியல் வழக்கு… 6 வாரத்துக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு!

இந்த விவகாரத்தை சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு எடுத்து விசாரணை செய்து வருகிறது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன் ஆஜராகி, 106 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு உள்ளதாகவும், இன்னும் 30 சாட்சிகள் விசாரிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சோமையாஜி, ஏற்கெனவே விசாகா கமிட்டி அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு, முடிவுக்காக காத்திருப்பதாகக் குறிப்பிட்டார்.

ராஜேஷ் தாஸின் பாலியல் வழக்கு… 6 வாரத்துக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு!

இன்னும் விசாரணையை முடிக்க எத்தனை நாட்கள் தேவைப்படுகிறது என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். அப்போது, விசாரணை அதிகாரி சார்பில், 4 முதல் 8 வாரங்கள் ஆகும் என தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி, “சிறப்பு டிஜிபி மீதான வழக்கை 6 வாரத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும். குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய அரசிடம் அனுமதி பெற்று சம்மந்தப்பட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜூன் மாதம் 18ஆம் தேதி ஒத்திவைத்தார்.