தூய்மையான நகரங்கள் 2020.. தொடர்ந்து 4வது ஆண்டாக இந்தூர் முதலிடம்.. முதல் 25ல் தமிழக நகரங்கள் இல்லை

தூய்மையான நகரங்கள் 2020.. தொடர்ந்து 4வது ஆண்டாக இந்தூர் முதலிடம்.. முதல் 25ல் தமிழக நகரங்கள் இல்லை

மத்திய அரசு மற்றும் நகர்புற மேம்பாட்டு அமைச்சகம் கடந்த 4 ஆண்டுகளாக தூய்மையாக உள்ள நகரங்களை தேர்ந்தெடுத்து விருது வழங்கி வருகிறது. 2016ம் ஆண்டில் நாட்டின் மிகவும் தூய்மையான நகரத்துக்கான விருதை மைசூரு தட்டி சென்றது. 2017ம் ஆண்டு முதல் தொடர்ந்து 3 முறை இந்தூர் நகரம் இந்த விருதை தக்கவைத்தது. இந்த சூழ்நிலையில் நேற்று தூய்மையான நகரங்கள் 2020 தரவரிசை பட்டியலை மத்திய அரசு வெளியிட்டது.

தூய்மையான நகரங்கள் 2020.. தொடர்ந்து 4வது ஆண்டாக இந்தூர் முதலிடம்.. முதல் 25ல் தமிழக நகரங்கள் இல்லை

மத்திய வீட்டு வசதி மற்றும் நகர விவகாரங்கள் துறை அமைச்சகம் ஏற்பாடு செய்து இருந்த விழாவில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி 2020ம் ஆண்டின் தூய்மையான நகரங்களுக்கான தரவரிசையை அறிவித்தார். அந்த பட்டியலில் தொடர்ந்து 4வது முறையாக மத்திய பிரதேசத்தின் இந்தூர் தூய்மையான நகரத்துக்கான விருதை தட்டி சென்றது. குஜராத்தின் சூரத் நகரம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. தூய்மையான நகரங்களுக்கான டாப் 20 பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த எந்த நகரங்களும் இடம்பெறவில்லை.

தூய்மையான நகரங்கள் 2020.. தொடர்ந்து 4வது ஆண்டாக இந்தூர் முதலிடம்.. முதல் 25ல் தமிழக நகரங்கள் இல்லை

இந்தியாவின் டாப் 10 தூய்மையான நகரங்கள் பட்டியல்

தரவரிசை    நகரங்கள்
1                 இந்தூர்
2                 சூரத்
3                 நவி மும்பை
4                அம்பிகாபூர்
5                மைசூர்
6               விஜயவாடா
7               அகமதாபாத்
8                புதுடெல்லி
9               சந்திராபூர்-எம்
10             கார்கோன்