மத்திய பிரதேச பெண்ணுக்கு கால்கள், கைகள் இல்லாமல் பிறந்த பெண் குழந்தை… டாக்டர்கள் குழப்பம்

மத்திய பிரதேச பெண்ணுக்கு கால்கள், கைகள் இல்லாமல் பிறந்த பெண் குழந்தை… டாக்டர்கள் குழப்பம்

மத்திய பிரதேசம் மாநிலம் விடிஷா மாவட்டத்தில் சிரோஞ்ச் தெஹ்ஸின் பகுதியில் உள்ளது சாகா கிராமம். அந்த கிராமத்தை சேர்ந்த 28 வயதான பெண்மணி ஒருவருக்கு கடந்த 26ம் தேதியன்று கால்கள் மற்றும் கைகள் இல்லாமல் குழந்தை பிறந்துள்ளது. இது தொடர்பாக செய்தி நிறுவனம் அளித்த தகவல்படி, அந்த பெண்மணிக்கு வீட்டில் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற அக்கறை இல்லாமல் பெற்றோர் இருந்துள்ளனர்.

மத்திய பிரதேச பெண்ணுக்கு கால்கள், கைகள் இல்லாமல் பிறந்த பெண் குழந்தை… டாக்டர்கள் குழப்பம்

இறுதியில் ஒரு வழியாக சிரோஞ்சில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்மிருதி மருத்துவமனைக்கு குழந்தையை காட்டியுள்ளனர். அங்கு குழந்தையை பார்த்த மருத்துவர்கள் மிகவும் குழப்பம் அடைந்தனர். அந்த மருத்துவமனையில் குழந்தை மருத்துவராக பணியாற்றும் சுரேஷ் அகர்வால் கூறுகையில், குழந்தைக்கு கை, கால்கள் இல்லையே தவிர வேறு எந்த உடல் நல குறைபாடுகள் இல்லை. குழந்தை மிகவும் ஆரோக்கியமாக உள்ளது இருப்பினும் மேலும் சோதனைகள் தேவை என தெரிவித்தார்.

மத்திய பிரதேச பெண்ணுக்கு கால்கள், கைகள் இல்லாமல் பிறந்த பெண் குழந்தை… டாக்டர்கள் குழப்பம்

டெட்ரா-அமெலியா எனப்படும் பாலியல் குரோமோசோம் அல்லாத ஒரு குரோமோசோமான ஆட்டோசோம் குறைபாடு கோளாறு காரணமாக குழந்தை கால்கள் மற்றும் கைகள் இல்லாமல் பிறக்கும். அதேசமயம் 1 லட்சம் குழந்தையில் ஒரு குழந்தைக்கு இது போன்ற குறைபாடுகள் ஏற்படும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். கால்கள், கைகள் இல்லாமல் பிறந்த குழந்தையின் படம் இன்டர்நெட்டில் வைரலாகி வருகிறது.