அரை மணி நேரம் ராம் ராம் எழுதுங்க.. ஊரடங்கை மீறுபவர்களுக்கு மத்திய பிரதேச போலீசின் நூதன தண்டனை

அரை மணி நேரம் ராம் ராம் எழுதுங்க.. ஊரடங்கை மீறுபவர்களுக்கு மத்திய பிரதேச போலீசின் நூதன தண்டனை

மத்திய பிரதேசத்தில் போலீசார் ஊரடங்கை மீறுபவர்களுக்கு தண்டனையாக சுமார் 30 நிமிடம் ராம் ராம் எழுத சொல்வது தற்போது வைரலாகி வருகிறது.

மத்திய பிரதேசத்தில் கொரோனா வைரஸ் பரவலை குறைக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசியமான தேவைக்கு மட்டுமே வெளியே வரும்படி மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேவையில்லாமல் வெளியே சுற்றுபவர்கள் கடும் நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்கப்படுகிறது. சத்னா மாவட்டத்தில் ஒரு துணை ஆய்வாளர் ஒருவர் ஊரடங்கை மீறுபவர்களுக்கு வித்தியாசமான தண்டனை வழங்குவது தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது.

அரை மணி நேரம் ராம் ராம் எழுதுங்க.. ஊரடங்கை மீறுபவர்களுக்கு மத்திய பிரதேச போலீசின் நூதன தண்டனை
லாக்டவுன்

மத்திய பிரதேசம் சத்னா மாவட்டத்தில் உள்ள கொல்கவன் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றுபவர் சந்தோஷ் சிங். இவர் ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களுக்கு தண்டனையாக வித்தியாசமாக சுமார் அரை மணி நேரம் ராம் ராம் என்று எழுத சொல்கிறார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: பொதுவாக கோவிட்-19 கட்டுப்பாடுகளை மீறும் மக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு ஒரு மணி நேரம் அடைத்து வைக்கப்படுவார்கள்.

அரை மணி நேரம் ராம் ராம் எழுதுங்க.. ஊரடங்கை மீறுபவர்களுக்கு மத்திய பிரதேச போலீசின் நூதன தண்டனை
ராம் ராம் எழுதும் நபர்

அந்த ஒரு மணி நேரத்தில் அவர்களை ராம் ராம் என்று எழுத சொல்வேன். இதனை செய்வதற்கு முன் அந்த நபரின் பெயரை முதலில் கேட்டுக் கொள்வேன். இதன் மூலம் யாருடைய மத உணர்வுகளையும் பாதிக்காது என்பதை உறுதி செய்யும். மேலும் இது விருப்பத்தின் அடிப்படையில் செய்வது, யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. அவர்கள் வீட்டுக்குள் இருக்க வேண்டும் என்பதை உணர வைப்பதற்கு இது ஒரு வழியாகும். இதுவரை யாரும் புகார் செய்யவில்லை. விதிமீறலில் ஈடுபட்டவர்கள் கடவுளின் பெயரை மகிழ்ச்சியாக எழுதுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.