Home இந்தியா அடப்பாவிகளா இதுக்கெல்லாம் போலீஸ் கேஸா?... மத்தியபிரதேத்தில் நடந்த வினோத சம்பவம்!

அடப்பாவிகளா இதுக்கெல்லாம் போலீஸ் கேஸா?… மத்தியபிரதேத்தில் நடந்த வினோத சம்பவம்!

டவுசர் அளவு சரியாக தைத்துக் கொடுக்காத காரணத்திற்காக ஒருவர் காவல் நிலையத்திற்குச் சென்ற வினோத சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தின் போபாலில் வசித்து வருகிறார் கிருஷ்ணகுமார். இவர் தனது வீட்டிற்கு அருகே உள்ள டெய்லர் ஒருவரிடம் 2 மீட்டர் துணியைக் கொடுத்து தைத்துத் தருமாறு கேட்டுள்ளார். 70 ரூபாய் செலவாகும் என்று கூறிய டெய்லரிடம் சம்மதம் தெரிவித்துள்ளார் கிருஷ்ணகுமார்.
இரண்டு நாள்களுக்குப் பிறகு டவுசரை வாங்கச் சென்றபோது, கொடுத்த அளவைவிட டவுசரை குட்டையாக தைத்துக் கொடுத்துள்ளார் அந்த டெயிலர். அதனால் கோபமடைந்த கிருஷ்ணகுமார் தான் கூறிய அளவிற்கு கொடுக்கவில்லை என்று வாக்குவாதம் செய்துள்ளார்.


மற்றொரு துணியில் டவுசர் தைத்துத் தரக்கோரி டெயிலரிடம் கிருஷ்ணகுமார் சண்டையிட்டு உள்ளார். இதற்கு தையல்காரர் மறுப்பு தெரிவிக்கவே கிருஷ்ணகுமார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்தப் புகாரைப் படித்து பார்த்த காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் நீண்ட யோசனைக்குப் பிறகே புகாரை பெற்றுள்ளனர். மேலும், இந்த விஷயத்திற்கு தீர்வு காண நீதிமன்றத்தை நாடுமாறும் ஆலோசனை கூறி திருப்பி அனுப்பியுள்ளனர்.

Most Popular

”விரல் ரேகை மூலமாக கணிணியில் வாட்ஸ் அப் வசதி” வாட்ஸ் அப் நிறுவனம் திட்டம்

செல்போனில் விரல் ரேகை பதிவிட்டு, கம்ப்யூட்டரில் வாட்ஸ்அப் பயன்படுத்தும் வசதியை அறிமுகப்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஸ்மார்ட் போனில் வாட்ஸ் அப் பயன்படுத்துவதை...

‘ரத்த வெள்ளத்தில் கிடந்த சடலம்’ தாயை இரும்புக் கம்பியால் அடித்து மகன்களே கொலை செய்த கொடூரம்!

புவனேஸ்வர் பகுதியில் இரும்புக் கம்பியால் தாயை மகன்களே அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க...

”புதிய ஏ சிரீஸ் ஸ்மார்ட் டிவிக்கள்” அறிமுகப்படுத்த ரெட்மி திட்டம்

ரெட்மி நிறுவனம் விரைவில் ஏ சிரீஸ் ஸ்மார்ட் டிவி ரகங்களை விற்பனைக்காக அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஸ்மார்ட்போன் விற்பனையில் முன்னணி நிறுவனமாக விளங்கும்,...

அனைத்து கட்சி கூட்டத்தை நடத்த வேண்டும்! முதல்வருக்கு முத்தரசன் வைக்கும் கோரிக்கை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில தலைவர் முத்தரசன், ஈரோடு மாவட்டம் கோபிச் செட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘’ எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க முடியாத அரசு நடிகர் சூர்யா மீது...
Do NOT follow this link or you will be banned from the site!