நான் மாஸ்க் அணியமாட்டேன் அதனால் என்ன?… பா.ஜ.க. அமைச்சரின் பதிலால் சர்ச்சை

 

நான் மாஸ்க் அணியமாட்டேன் அதனால் என்ன?… பா.ஜ.க. அமைச்சரின் பதிலால் சர்ச்சை

மாஸ்க் ஏன் அணியவில்லை என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, நான் மாஸ்க் அணியமாட்டேன் அதனால் என்ன? என்ற மத்திய பிரதேச பா.ஜ.க. அமைச்சரின் பதிலால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் ஏழைகள் மற்றும் எஸ்.சி. சமூகங்களுக்கு சமூக பாதுகாப்பு வழங்கும் மாநில அரசின் சம்பல் திட்டத்தின்கீழ் உதவி விநியோக நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் அம்மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, துல்சிராம் சிலவாத் மற்றும் இதரவ பா.ஜ.க. தலைவர்களும் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியின்போது அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா மாஸ்க் அணியாமல் இருந்தார். ஆனால் மற்ற தலைவர்கள் அனைவரும் மாஸ்க் அணிந்து இருந்தனர்.

நான் மாஸ்க் அணியமாட்டேன் அதனால் என்ன?… பா.ஜ.க. அமைச்சரின் பதிலால் சர்ச்சை
நரோட்டம் மிஸ்ரா

அந்த நிகழ்ச்சிக்கு பிறகு அமைச்சர் நரோட்டம் மிஸ்ராவிடம் செய்தியாளர்கள் என் மாஸ்க் அணியவில்லை என்று கேள்வி கேட்டனர். அதற்கு அவர் நான் எந்த நிகழ்ச்சியிலும் மாஸ்க் அணியமாட்டேன். அதனால் என்ன? என்று அசால்டாக பதில் அளித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அடிப்படை மாஸ்க் அணிதல் போன்ற அடிப்படை விதிமுறைகளை பின்பற்ற முயற்சி செய்து வரும் வேளையில், நான் மாஸ்க் அணியமாட்டேன் என்று சாதரணமாக அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா கூறியது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது.

நான் மாஸ்க் அணியமாட்டேன் அதனால் என்ன?… பா.ஜ.க. அமைச்சரின் பதிலால் சர்ச்சை
காங்கிரஸ்

இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ஒருவர் டிவிட்டரில், அவருக்கு எதிராக (மிஸ்ரா) நடவடிக்கை எடுக்க தைரியம் உள்ளவர்கள் யாராவது இருக்கிறார்களா? விதிகள் சாதாரண மக்களுக்கு மட்டும்தானா? என பதிவு செய்து இருந்தார். மாஸ்க் தொடர்பான சர்ச்சைக்கு நரோட்டம் மிஸ்ரா டிவிட்டரில், பொதுவாக நான் மாஸ்க் அணிந்து கொள்கிறேன். ஆனால் நான் பாலிபஸால் அவதிப்படுவதால் நீண்ட நேரம் அதனை அணிந்து இருக்க முடியாது. நான் மாஸ்க் அணிந்தால் அது மூச்சு திணறலுக்கு வழிவகுக்கிறது என பதிவு செய்து இருந்தார்.