பொதுமக்களுக்கு மாஸ்க் விநியோகம் செய்த பா.ஜ.க. அமைச்சர்.. மாஸ்க் அணிய மாட்டேன் என சர்ச்சையை ஏற்படுத்தியவர்

பொதுமக்களுக்கு மாஸ்க் விநியோகம் செய்த பா.ஜ.க. அமைச்சர்.. மாஸ்க் அணிய மாட்டேன் என சர்ச்சையை ஏற்படுத்தியவர்

மாஸ்க் அணிய மாட்டேன் அதனால் என்ன என்று சர்ச்சையை ஏற்படுத்திய மத்திய பிரதேச அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா நேற்று போபாலில் உள்ள புதிய சந்தைக்கு சென்று பொதுமக்களுக்கு மாஸ்க் விநியோகம் செய்தார்.

மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் நேற்ற போபாலில் உள்ள புதிய சந்தைக்கு சென்றார். அங்கு பொதுமக்களுக்கு மாஸ்க் விநியோகம் செய்தார் மேலும் சிலருக்கு அவரை மாஸ்க்கும் போட்டு விட்டார். மாஸ்க் விநியோகம் தொடர்பாக அவர் கூறுகையில், கோவிட்-19லிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள, மாஸ்க் அணிவது ஒருவர் எடுக்க வேண்டிய முதல் எச்சரிக்கை நடவடிக்கையாகும். அனைவரும் கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

பொதுமக்களுக்கு மாஸ்க் விநியோகம் செய்த பா.ஜ.க. அமைச்சர்.. மாஸ்க் அணிய மாட்டேன் என சர்ச்சையை ஏற்படுத்தியவர்
பொதுமக்களுககு மாஸ்க் அணிவிக்கும் நரோட்டம் மிஸ்ரா

நேற்று இவ்வளவு பொறுப்பாக பேசிய மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா கடந்த மாதம் ஒரு நிகழ்ச்சியில் மாஸ்க் அணியாமல் கலந்து கொண்டதோடு, இது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு நான் மாஸ்க் அணிய மாட்டேன் அதனால் என்ன என்று அசால்ட்டாக பதில் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து நரோட்டம் மிஸ்ரா சில நேரங்களில் நாம் கவனக்குறைவாக ஏதாவது பேசுகிறோம், அது நம் உணர்வுகளுக்கு ஏற்ப செல்லாது. முககவசம் (அணிவது) தொடர்பாக நான் பேசிய வார்த்தைகள் முற்றிலும் தவறானது.

பொதுமக்களுக்கு மாஸ்க் விநியோகம் செய்த பா.ஜ.க. அமைச்சர்.. மாஸ்க் அணிய மாட்டேன் என சர்ச்சையை ஏற்படுத்தியவர்
பொதுமக்களுககு மாஸ்க் அணிவிக்கும் நரோட்டம் மிஸ்ரா

மரியாதைக்குரிய பிரதமர் மோடியின் உணர்வுகளுக்கு நேர்மாறான எனது சொந்த வார்த்தைகளால் நான் மிகவும் வேதனையை அடைந்தேன். எனது அறிக்கைக்கு வருந்துகிறேன். அனைத்து மக்களும் முககவசம் அணியுங்கள் மற்றும் கோவிட் தொடர்பான பாதுகாப்பு கடைப்பிடியுங்க என வேண்டுகோள் விடுக்கிறேன் என்று தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து பேசியது குறிப்பிடத்தக்கது.