தேர்தல் கூட்டங்களில் 100 பேருக்கு மேல் இருந்தால் எப்.ஐ.ஆர். பதிவு.. ம.பி. அரசியல் கட்சிகளுக்கு செக் வைத்த நீதிமன்றம்

தேர்தல் கூட்டங்களில் 100 பேருக்கு மேல் இருந்தால் எப்.ஐ.ஆர். பதிவு.. ம.பி. அரசியல் கட்சிகளுக்கு செக் வைத்த  நீதிமன்றம்

மத்திய பிரதேசத்தில் இடைத்தேர்தல் நெருங்கி வரும் வேளையில், எந்தவொரு தேர்தல் கூட்டங்களிலும் 100 பேருக்கு மேல் இருந்தால் சம்பந்தப்பட்ட கட்சிக்கு எதிராக எப்.ஐ.ஆர். பதிவு செய்ய குவாலியர் உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் காலியாக உள்ள 28 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நவம்பர் 3ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அம்மாநிலத்தில் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் வேலையில் தீவிரமாக உள்ளன. குறிப்பாக பா.ஜ.க.வும், காங்கிரசும் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற நோக்கத்தில் பம்பரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

தேர்தல் கூட்டங்களில் 100 பேருக்கு மேல் இருந்தால் எப்.ஐ.ஆர். பதிவு.. ம.பி. அரசியல் கட்சிகளுக்கு செக் வைத்த  நீதிமன்றம்
மத்திய பிரதேச உயர் நீதிமன்றம்

இந்த சூழ்நிலையில், கடந்த மாதம் 11ம் தேதியன்று, கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவல் காரணமாக அரசியல் கூட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வக்கீல் ஆஷிஷ் பிரதாப் சிங் என்பவர் பொது நல வழக்கு ஒன்றை குவாலியர் உயர் நீதிமன்றத்தில் அண்மையில் தொடர்ந்தார். இதனையடுத்து தலைமை செயலாளர், கலெக்டர் மற்றும் எஸ்.பி. உள்ளிட்டோருக்கு இந்த வழக்கு தொடர்பாக அந்த மாதம் 28ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

தேர்தல் கூட்டங்களில் 100 பேருக்கு மேல் இருந்தால் எப்.ஐ.ஆர். பதிவு.. ம.பி. அரசியல் கட்சிகளுக்கு செக் வைத்த  நீதிமன்றம்
பா.ஜ.க., காங்கிரஸ்

இந்த வழக்கு குவாலியர் உயர் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, எந்தவொரு கட்சியின் தேர்தல் கூட்டத்தில் 100 பேருக்கு மேல் இருந்தால் சம்பந்தப்பட்ட கட்சிக்கு எதிராக எப்.ஐ.ஆர். பதிவு செய்ய அனுமதி அளித்துள்து.மேலும், மாநிலத்தில் அரசியல் நடவடிக்கைகளை கண்காணிக்க மற்றும் கட்சிகள் நெறிமுறைகளை மீறினால் பதிவாளர் வாயிலாக நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்க 3 நீதிபதிகளை நீதிமன்றம் நியமனம் செய்துள்ளது. தேர்தல் நேரத்தில் உயர் நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கை அரசியல் கட்சிகளுக்கு பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.