19 ஆண்டுகளில் 290 புலிகளை இழந்த மத்திய பிரதேசம்… 5 சதவீத புலிகள் வேட்டையில் பலி..

19 ஆண்டுகளில் 290 புலிகளை இழந்த மத்திய பிரதேசம்… 5 சதவீத புலிகள் வேட்டையில் பலி..

மத்திய பிரதேசத்தில் கடந்த 19 ஆண்டுகளில் 290 புலிகள் இறந்துள்ளன. இதில் 5 சதவீத புலிகள் மட்டுமே மனிதர்களின் வேட்டைக்கு பலியாகி உள்ளதாக வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்தியாவின் புலிகள் மாநிலமாக மத்திய பிரதேசம் விளங்குகிறது. கடந்த 19 ஆண்டுகளில் அம்மாநிலத்தில் 290 புலிகள் இறந்துள்ளன. இருப்பினும் இன்னும் அங்கு 675க்கும் மேற்பட்ட புலிகள் உள்ளன. அம்மாநிலத்தில் புலிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். முதன்மை வனப் பாதுகாவலர் (வன விலங்கு) அலோக் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

19 ஆண்டுகளில் 290 புலிகளை இழந்த மத்திய பிரதேசம்… 5 சதவீத புலிகள் வேட்டையில் பலி..
புலிகள்

கடந்த 2002ம் ஆண்டு முதல் இதுவரை மத்திய பிரதேசத்தில் 290 புலிகள் இறந்துள்ளன. இதில் 5 சதவீதம் புலிகள் மட்டுமே மனித வேட்டை அல்லது மனித-விலங்கு மோதலில் பலியாகி உள்ளன. பெரும்பாலான புலிகள் பிராந்திய சண்டை மற்றும் இயற்கை காரணங்களால் இறந்துள்ளன. இருப்பினும் புலிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போது 550 புலிகள் கன்ஹா, பந்தவ்கர், பெஞ்ச், சத்புரா, பன்னா மற்றும் சஞ்சய் காந்தி ரிசர்வ் மற்றும் காடுகளில் உள்ளன.

19 ஆண்டுகளில் 290 புலிகளை இழந்த மத்திய பிரதேசம்… 5 சதவீத புலிகள் வேட்டையில் பலி..
புலி குட்டிகள்

பூங்காக்களில் 125 புலிக் குட்டிகள் உள்ளன. மேலும் காட்டில் 10 முதல் 20 புலிக்குட்டிகள் சுற்றி வருகின்றன. அவை காடுகளின் உட்பகுதிக்குள் இருப்பதால் அவற்றை பிடிக்க முடியாது. அவை இளமையாக மாறி வெளியே வரும் போது நாம் அவற்றை பார்க்க முடியும். கேமரா, ரோந்து மற்றும் பிற வழிகளில் புலிகளின் நடமாட்டம் பதிவு செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.