மத்திய பிரதேசத்தில் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படாது… ஆண்டு தேர்வும் நோ… சிவ்ராஜ் சிங் சவுகான் அறிவிப்பு

மத்திய பிரதேசத்தில் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படாது… ஆண்டு தேர்வும் நோ… சிவ்ராஜ் சிங் சவுகான் அறிவிப்பு

மத்திய பிரதேசத்தில் 2021ம் மார்ச் 31ம் தேதி வரை 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும். மேலும் ஆண்டு தேர்வும் கைவிடப்படுவதாக அம்மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு கடந்த மார்ச் மாத இறுதியில் நாடு தழுவிய லாக்டவுனை அமல்படுத்தியது. லாக்டவுன் அமல்படுத்துவதற்கு முன்னதாக அனைத்து மாநிலங்களிலும் பள்ளிகள் மூடப்பட்டன. பள்ளிகள் திறந்து கிட்டத்தட்ட 9 மாதங்கள் தாண்டி விட்ட நிலையில், இன்னும் கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் இருப்பதால் பள்ளிகள் திறக்கப்படுமா என்ற சந்தேகம் இருந்து வருகிறது.

மத்திய பிரதேசத்தில் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படாது… ஆண்டு தேர்வும் நோ… சிவ்ராஜ் சிங் சவுகான் அறிவிப்பு
மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான்

இந்த சூழ்நிலையில் மத்திய பிரதேசத்தில் எதிர்வரும் மார்ச் 31ம் தேதி வரை 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக அம்மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் கூறியதாவது: மாநிலத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும்.

மத்திய பிரதேசத்தில் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படாது… ஆண்டு தேர்வும் நோ… சிவ்ராஜ் சிங் சவுகான் அறிவிப்பு
கல்லூரி வகுப்பறை

அவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்படாது. புரோஜெக்ட் அடிப்படையில் அவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இருப்பினும் 9 முதல் 12ம் வகுப்பு வரை வழக்கமான வகுப்புகள் விரைவில் தொடங்கும். மற்றவர்களுக்கு புதிய கல்வியாண்டு 2021 ஏப்ரல் 1ம் தேதி தொடங்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார். பள்ளிகள் திறப்பு விவகாரத்தில் மத்திய பிரதேசத்தின் வழியை மற்ற மாநிலங்களும் பின்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.