சீன நிறுவனங்களுக்கு ஆதரவா செயல்பட்டேனா? பா.ஜ.க. தலைவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய கமல் நாத்

 

சீன நிறுவனங்களுக்கு ஆதரவா செயல்பட்டேனா? பா.ஜ.க. தலைவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய கமல் நாத்

எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் இந்திய பகுதிகளை சீன ராணுவம் ஆக்கிரமிப்பு செய்ய முயற்சி செய்து வருகிறது மேலும், கடந்த மாதம் 15ம் தேதியன்று கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற சீன வீரர்களை இந்திய வீரர்கள் தடுத்து விரட்டி அடித்தனர். அப்போது இரு நாட்டு வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதனையடுத்து இந்திய-சீனா மோதல் தொடர்பாக உண்மையை சொல்லும்படி காங்கிரஸ் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது.

சீன நிறுவனங்களுக்கு ஆதரவா செயல்பட்டேனா? பா.ஜ.க. தலைவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய கமல் நாத்

இதற்கு பதிலடியாக ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு சீன தூதரகம் நன்கொடை கொடுத்த விவகாரத்தை பா.ஜ.க. கையில் எடுத்தது. மேலும், காங்கிரசின் மூத்த தலைவரும், மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான கமல் நாத் சீன நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட்டார் என மத்திய பிரதேச பா.ஜ.க. தலைவர் வி.டி. சர்மா மற்றும் மூத்த பா.ஜ.க. தலைவர் பிரதாப் ஜா ஆகியோர் குற்றச்சாட்டினர். கமல் நாத் முன்பு மத்திய அமைச்சராக இருந்தபோது, இறக்குமதி வரியை குறைத்து சீன நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட்டார் என அவர்கள் குற்றச்சாட்டினர்.

சீன நிறுவனங்களுக்கு ஆதரவா செயல்பட்டேனா? பா.ஜ.க. தலைவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய கமல் நாத்

இதனையடுத்து அந்த பா.ஜ.க. தலைவர்களுக்கு கமல் நாத் சட்ட நோட்டீஸ் அனுப்பினார். கடந்த மாதம் 30ம் தேதி அனுப்பிய அந்த நோட்டீஸில், மூத்த காங்கிரஸ் தலைவருக்கு (கமல் நாத்) எதிராக தவறான மற்றும் ஆதாரமற்ற அறிக்கைகளை சந்தேகத்துக்கு இடமின்றி பரப்புகிறீர்கள். மத்திய பிரதேசத்தில் 24 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் வருவதால், உங்கள் கட்சியை பாதுகாக்க, அரசியல் ரீதியாக போட்டியை குறைப்பதற்கான ஒரு குற்றவியல் பொறிமுறைதான் அந்த (பா.ஜ.க. தலைவர்களின்) அறிக்கைகள் என கூறப்பட்டுள்ளதாக தகவல்.