ஒரு 4 நாள் யாகம் செய்யுங்க.. கொரோனா 3வது அலை இந்தியாவை தொடாது.. பா.ஜ.க. அமைச்சர் அட்வைஸ்

ஒரு 4 நாள் யாகம் செய்யுங்க.. கொரோனா 3வது அலை இந்தியாவை தொடாது.. பா.ஜ.க. அமைச்சர் அட்வைஸ்

4 நாட்கள் யாகம் செய்யுங்க கொரோனாவின் 3வது அலை இந்தியாவை தொடக் கூட முடியாது என்று மக்களிடம் மத்திய பிரதேச பா.ஜ.க அமைச்சர் தெரிவித்து இருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

நம் நாட்டில் தற்போது கொரோனா வைரஸின் 2வது அலை பெரிய அழிவுகளை ஏற்படுத்தி வருகிறது. மேலும் நாட்டின் மருத்துவ பணியாளர்களுக்கு கூடுதல் பணி சுமையை அளித்துள்ளது. விரைவில் கொரோனா வைரஸின் 3வது அலை தாக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கணித்துள்ளனர். இந்த சூழ்நிலையில் யாகம் செய்தால் கொரோனா 3வது அலை வராது என பா.ஜ.க. அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.

ஒரு 4 நாள் யாகம் செய்யுங்க.. கொரோனா 3வது அலை இந்தியாவை தொடாது.. பா.ஜ.க. அமைச்சர் அட்வைஸ்
கொரோனா வைரஸ்

மத்திய பிரதேச கலாச்சார துறை அமைச்சராக இருப்பவர் உஷா தாக்கூர். இந்தூரில் கோவிட் கேர் மையத்தை தொடங்கி வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களை அவர் சந்தித்து பேசினார். அப்போது உஷா தாக்கூர் கூறியதாவது: சுற்றுச்சூழலை சுத்திகரிப்பதற்காக நான்கு நாட்கள் யாகம் செய்யுங்க. இது அக்னி சடங்கு. முந்தைய காலங்களில் நம் முன்னோர்கள் தொற்று நோயிலிருந்து விடுபட யாக சடங்கு செய்தார்கள்.

ஒரு 4 நாள் யாகம் செய்யுங்க.. கொரோனா 3வது அலை இந்தியாவை தொடாது.. பா.ஜ.க. அமைச்சர் அட்வைஸ்
உஷா தாக்கூர்

நாம் அனைவரும் சுற்றுச்சூழலை சுத்திகரிப்போம். கோவிட் மூன்றாவது அலை இந்தியாவை தொடக் கூட செய்யாது. நிபுணர்களின் கருத்துப்படி, இந்த அலை முதலில் குழந்தைகளை தாக்கும். இதற்காக மத்திய அரசால் முழுமையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தொற்றுநோயை வெற்றிகரமாக சமாளிப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.